கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனும், பாஜக சார்பில் அக்கட்சியின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுகின்றனர்.
நேற்று (மார்ச் 15) கமல்ஹாசன், வானதி சீனிவாசன் ஆகியோர் வேட்புமனு தாக்கல்செய்த நிலையில் தற்போது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று (மார்ச் 16) காலை கமல்ஹாசன் பந்தய சாலை, ராமநாதபுரம் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாடினார். தொடர்ந்து பேருந்திலிருந்த பயணிகளிடம் உரையாடிய அவர் உக்கடத்திலிருந்து ஆட்டோ மூலம் தான் தங்கியுள்ள தங்கும் விடுதிக்குப் பயணம்செய்தார்.
அதேபோல் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் காந்திபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து, ராமநாதபுரம் வரை ஆட்டோவில் பயணம்செய்து மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
இரண்டு வேட்பாளர்களும் சொகுசு கார் இருந்தும் ஆட்டோவில் பயணம் செய்ததைக் கண்ட நெட்டிசன்கள் பெட்ரோல் விலை ஏற்றத்தால்தான் இவர்கள் ஆட்டோவில் சென்றதாக மீம்ஸ் போட்டு சமூக வலைதளங்களில் கிண்டல் செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க: அரசியல் எங்களுக்குத் தொழில் அல்ல, கடமை - கமல்ஹாசன் பதிலடி!