ETV Bharat / state

"என்னை விட்டா தோட்டத்துல போய் விவசாயம் பார்ப்பேன்" - அண்ணாமலை ஓபன் டாக்! - விவசாயம் செய்ய போவதாக கூறிய அண்ணாமலை

K annamalai: கோவை அக்ரகார சாமக்குளம் பகுதியில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்ட பணிகளை செய்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "என்னை விட்டால் தோட்டத்து பக்கம் போய் விவசாயம் பார்க்க போயிடுவேன்" என வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2023, 5:08 PM IST

கோவையில் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு

கோயம்புத்தூர்: பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக கோவை அக்ரகார சாமக்குளம் பகுதியில் உள்ள குளக்கரை சுத்தம் செய்யும் பணியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஈடுப்பட்டார். நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இன்று ஒரு மணி நேரம் நாட்டின் தூய்மைக்காக மக்கள் அனைவரும் தூய்மைப் பணிகள் செய்ய வேண்டும் என பிரதமர் அறைகூவல் விடுத்துள்ளார். அதன்படி இங்கு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த குளத்தை பார்க்கும் பொழுது தமிழ்நாட்டில் இன்னும் விவசாயத்தை நாம் எந்த அளவுக்கு மேம்படுத்த வேண்டும் என தெரிகிறது. இந்தக்குளம் அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் பயன்பட கூடிய ஒரு குளம். திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்த பொழுது கிட்டத்தட்ட 96 விழுக்காடு அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் பணிகள் முடிவடைந்து இருந்தது. அதன் பின்னர் ஆமை வேகத்தில் பல போராட்டங்கள் செய்து 100 விழுக்காடு திட்டம் நிறைவடைந்து இருப்பதாக திமுக அரசு கூறுகிறது.

ஆனால், இரண்டு மாத காலமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் கசிந்துகொண்டிருக்கிறது. இதன் மூலம் விவசாய மக்கள் மீது திமுக எந்த அளவுக்கு அக்கறை கொண்டுள்ளது என்பது தெரிகிறது. நம் நாட்டில் 142 கோடி பேர் இருக்கிறோம், இந்த தூய்மைப் பணியில் குழந்தைகளையும் முதியவர்களையும் விட்டுவிட்டால் 100 கோடி பேர் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் பாரதத்தின் தூய்மைக்காக பணியாற்றினால் இந்த நாடு எப்படிப்பட்ட நாடாக மாறும் என்பது நாம் நினைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று.

இதனை சவுத் ஆப்பிரிக்காவும் நெல்சன் மண்டேலா பிறந்தநாளை முன்னிட்டு பின்பற்றி வருகிறது. இதனை தற்பொழுது இந்தியாவும் முன்னெடுத்துள்ளது தூய்மைப் பணி செய்யும் பொழுது எனக்கு தெரிந்தவரை நம்முள் இருக்கும் ஈகோ-வை கொள்கிறோம்.

நான் என்கின்ற அகந்தை நான் பணக்காரன் ஏழை இந்த வேலையை தான் நான் செய்ய வேண்டும் இதனை செய்யக்கூடாது, ஜாதிகள் என அனைத்தையும் தூய்மை செய்வதன் மூலமாக ‘நாம் செய்யக்கூடிய வேலையை நம் கைகளால் செய்ய வேண்டும்’ என மகாத்மா காந்தி கூறியது போல் செய்தால் சமுதாயத்தில் இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வு தாமாக அழிந்து விடும். இது நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியம்.

பிரதமர் நாம் அனைவரும் இன்று மற்றும் நாளை காதி கடைகளில் ஒரு பொருளையாவது வாங்க வேண்டும் என கூறியிருக்கிறார். எனவே அனைவரும் காதி பொருள்களை இன்று அல்லது நாளையோ வாங்குங்கள். பிரதமர் வந்த பிறகு காதியின் விற்பனை ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது. உள்ளூர் பொருள்களுக்கு குரல் கொடுங்கள் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார், எனவே வரக்கூடிய பண்டிகை காலங்களில் உள்ளூர் சந்தைகளில், பக்கத்து ஊர் அல்லது பக்கத்து மாநிலங்களில் வாங்குங்கள்.

சாலையோர வியாபாரிகளுக்கு மதிப்பளித்து சாலையோர பொருள்களையும் வாங்குங்கள். இனிப்புகளை கூட லோக்கல் கடைகளில் வாங்குங்கள், பிராண்டட் கடைகளில் வாங்காதீர்கள். இதுபோன்ற மிகப் பெரிய முன்னெடுப்பை பிரதமர் கையில் எடுத்துள்ளார். கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் மிகவும் நன்றாக உள்ளது. இனி நான்காம் தேதி மேட்டுப்பாளையத்தில் மீண்டும் அந்த நடைபயணத்தை தொடங்குகின்றோம். இதில், இளைஞர்கள் மகளிர் குடும்பத் தலைவிகள் என அனைவரும் பங்கேற்கிறார்கள். ஜனவரி மாதம் இந்த நடைபயணம் முடியும் பொழுது பாஜகவிற்கு தமிழ்நாட்டில் பெரிய எழுச்சி ஏற்பட்டு இருக்கும்” என்றார்.

தொடர்ந்து, குன்னூர் பகுதியில் ஏற்பட்ட சுற்றுலாப் பேருந்து விபத்து குறித்தான கேள்விக்கு, “நேற்று இன்றைக்கு எல்லாம் அரசுக்கு நாம் தொந்தரவு அளிக்கக்கூடாது அவர்களுடைய வேலைகளை அவர்கள் செய்யட்டும். அரசே துரிதமாக வேலை செய்து வருகிறார்கள். மலைப்பகுதிகளில் வாகனங்களை ஓட்டுவோர் மிகவும் கவனத்துடன் வாகனத்தை இயக்க வேண்டும் என நான் வேண்டுகோள் விடுகிறேன்” என்றார்.

டெல்லி செல்வதன் அவசியம் என்ன?: தொடர்ந்து பேசிய அவர், “இன்று (அக்.01) நான் டெல்லிக்கு செல்கிறேன். யாத்திரையில் ஒவ்வொன்றை கடக்கும் பொழுதும் தேசிய தலைவர்களுக்கு நடைப்பயணம் எப்படி செல்கிறது என்பது குறித்தான அறிவிப்பை நான் தெரிவித்து வருகிறேன். 3ஆம் தேதி பாஜக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. டெல்லி சென்று விட்டு வந்து அதில் பங்கேற்கிறேன். அதனை தொடர்ந்து 4ஆம் தேதியில் இருந்து பாதையாத்திரை மீண்டும் தொடங்குகிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு ஏழு மாத காலங்கள் இருக்கின்ற நேரத்தில் அவரவர்கள் கட்சியை வளர்க்க வேண்டும் என அனைவரும் எண்ணுவார்கள். பாஜகவும் அதற்கான வேலையை செய்து வருகிறது. இதில், சர்ச்சை எதுவும் இல்லை. கூட்டணி குறித்து பேச வேண்டிய நேரத்தில் தேசிய தலைவர்கள் பேசுவார்கள். ஏனென்றால் ஒரு கருத்திற்கு எதிர் கருத்து கூறினால் அது எங்கே போய் முடியும் என்று தெரியாது. எனவே அது குறித்து நான் பேச அவசியம் இல்லை, நேரம் வரும் பொழுது அது பற்றி பேசலாம்.

தூய்மை செய்வது என்பது அரசு சார்ந்த நிகழ்வு என்பதை சொல்வதை விட பொதுமக்கள் தாமாக முன்வந்து ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மணி நேரம் இதனை செய்ய வேண்டும். தூய்மையான அரசியலின் அடிப்படை அச்சாரம் என்பதை மக்கள் அதனை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். தூய்மையான அரசியல் என்பதை மக்கள் மனதில் விதைக்க வேண்டும் அதனை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். தூய்மையான அரசியல் என்பது ஒரு விதை. தற்பொழுது இதனை நாம் பேச ஆரம்பித்து உள்ளோம் முடிந்தவரை அதனை நடைமுறையில் பின்பற்ற பார்க்கிறோம்.

தூய்மை அரசியலை பற்றி கூற வேண்டும் என்றால் தற்பொழுதுதான் செடி வளர்ந்து வருகிறது. என்னதான் வேகமாக வளர்ந்து வந்தாலும் ஒரு கட்டத்தில் நடைமுறையை பார்க்க வேண்டி உள்ளது. தற்பொழுது தூய்மை அரசியல் என்பதை ஒரு தாரக மந்திரமாக முன்வைத்து எடுத்து செல்கிறோம். தூய்மை அரசியல் என்று சொன்னாலே தோல்விகள் நிச்சயம், அதனை தாண்டித்தான் நாம் நிற்க வேண்டும். நான் சவுத் ஆப்பிரிக்காவிற்குச் சென்ற பொழுது நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளை முன்னிட்டு அங்கிருந்த அனைத்து மக்களும் எதுவுமே பணியில் ஈடுபட்டார்கள். நெல்சன் மண்டேலா அரசியல் வருவதற்கு 20 ஆண்டு காலங்கள் ஆகியது.

மக்கள் இப்படித்தான் அரசியல் வேண்டும் என்று சொன்னால் அரசியல்வாதிகள் அவர்களை மாற்றிக் கொள்வார்கள் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். இந்த மாதிரியான அரசியல்வாதியைத்தான் நான் ஆதரிப்பேன் என்று மக்கள் சொல்லிவிட்டால் அனைத்து அரசியல்வாதிகளும் மாறுவார்கள். கட்சி அடிப்படையில் இல்லாமலும் சித்தாந்த அடிப்படையில் இல்லாமலும் அனைவரும் மாறுவார்கள். அதற்கான விதையை நான் போடுகிறேன் என்னை போல் பலரும் போடுகிறார்கள்.

அதற்காக மற்றவர்கள் எல்லாம் தவறான அரசியல் செய்கிறார்கள் என நான் கூறவில்லை. தமிழ்நாடு தூய்மை அரசியலுக்கு இலக்கணமாக இருக்க முடியும், காமராஜர் வாழ்ந்த பூமி இது. தூய்மை அரசியலுக்கு இளைஞர்கள் பலரும் வரவேண்டும் என்னுடைய யாத்திரைக்கும் பல இளைஞர்கள் வருகிறார்கள், அதனை எந்த அளவிற்கு அரசியல் இயக்கமாக மாற்றுவது என்பது குறித்து எனக்கு தெரியாது அதற்கான நேரம் எடுக்கும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்த நேரத்தில் என்னை விட்டு விட்டால் நான் தோட்டத்திற்கு போய் விடுவேன். இதைவிட எனக்கு எல்லாமே முக்கியம் என்பது என்னுடைய வேலையை என்னுடைய தோட்டத்தில் செய்யணும் அதற்காகத்தான் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்தேன். அரசியலில் கட்டாயப்படுத்தி நான் இல்லை அரசியலில் இருக்க வேண்டுமே என்று இருக்கிறேன். மாற்றத்தை கொண்டு வருவதற்கு அரசியலை ஒரு ஆயுதமாக பார்க்கிறேன். ஒன்பது மாதங்களாக NGO நடத்தி வருகிறேன். அரசியலைப் பொறுத்தவரை 70 விழுக்காடு நெகட்டிவ் 30 விழுக்காடு பாசிட்டிவ் உள்ளது.

ஏனென்றால் இங்கு தனிமனித தாக்குதல் சித்தார்ந்த அடிப்படையில் தாண்டி நிற்க வேண்டும். இதில் கிடைக்கக்கூடிய மாற்றம் என்பது மற்றதை விட வேகமாக கிடைக்கும். தன்னார்வக் குழுவில் 10 ஆண்டுகளில் எடுக்கக்கூடிய மாற்றம் அரசியலில் இரண்டு மாதத்தில் கிடைக்கும். அரசியலைப் பொறுத்தவரை பிடித்து அரசியல்வாதியாக இருக்கிறேன் என்று சொல்லுவதை விட மாற்றத்தை கொண்டு வருவதற்கு அரசியலைத் தவிர வேறு வழி இல்லை என்பதால் அரசியலில் இருக்கின்றேன் எனக் கூறுவது சரியான வார்த்தையாக இருக்கும்.

கோவையில் நாடாளுமன்ற உறுப்பினராக சிபிஆர் இருக்கும் பொழுது இந்த குலத்தின் பாதுகாப்பிற்காக அன்றைக்கே 85 லட்சம் ரூபாயை ஒதுக்கினார்கள். இதன் மூலமாக அப்பொழுதே பாஜக நிர்வாகி இக்குளத்தை பாதுகாப்பதற்கு எப்படி செயல்பட்டுள்ளார் என்பது தெரிகிறது” என்றார்.

தொடர்ந்து, நெடுங்குன்றம் சூர்யா பாஜகவில் இணைந்தது குறித்தான கேள்விக்கு, “அது குறித்து எனக்கு தெரியாது நான் பாதையாத்திரை சென்று கொண்டிருக்கிறேன். கட்சியில் இணைவது பற்றி கூறினால் நான் யாரையும் இணைக்க வேண்டும் என கூறுவதில்லை. அரசியலுக்கு வந்த புதிதில் நான் வெள்ளை கருப்பாக சமுதாயத்தை பார்த்தேன். இந்த மூன்று ஆண்டுகளாக பார்க்கும் பொழுது இதனை ஒரு பவர் கேமாக அரசியலை பார்க்கிறார்கள். அரசியல் மூலமாக ஆதாயங்களை தேடி தான் ஒரு பவர்ஃபுல் மனிதர் என்பதை காட்டுவதற்காக வருகிறார்கள் சிலர் தவறாக மனிதர்களாக இருந்தாலும் தன்னை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பாக இதனை பார்க்கிறார்கள்.

தற்பொழுது கட்சியில் இணைந்து உள்ளவர்கள் அவர்களுக்குள்ளேயே ஒரு கட்டுப்பாட்டை விதித்து வந்துள்ளார்கள். இத்தனை ஆண்டுகளாக என்னுடைய எனர்ஜி நெகட்டிவ் எனர்ஜியாக போய்விட்டது, நான் பாசிட்டிவாக மாற்ற வேண்டும் என எண்ணுவது பாரதிய ஜனதா கட்சி ஒரு வாய்ப்பளித்துள்ளது என்பதாகத்தான் நான் பார்க்கிறேன். முடிந்தவரை இந்த கட்சியை டீசண்டாக நாங்கள் நடத்த பார்க்கிறோம்.

கட்சியில் ஒருவர் சேரும் பொழுது அவர்களுடைய வழக்குகளைப் பாருங்கள், அனைவரையும் நல்லவர்கள் என நான் கூற வரவில்லை, நல்லவர்கள் என கூறி கட்சியில் சேருபவர்கள் தொடர்ந்து நல்லவர்களாக இருக்கப் போவதும் கிடையாது. ஒரு மாத காலம் இரண்டு மாத காலம் அவர்களை ட்ரெயல் பாருங்கள். நீங்கள் சொல்லுகின்ற நபருக்கும் கூட அந்த அணியின் தலைவர் ஏதேனும் ஒரு கட்டுப்பாட்டை விதித்திருப்பார் என நம்புகின்றேன், நான் இங்கிருந்து அதனை கண்காணித்து வருகிறேன்.

பாஜக கட்சியின் அடையாளத்தை வைத்துக்கொண்டு யாரேனும் தவறு செய்தால் நான் அதனை விட மாட்டேன். அவர் மாறுகின்றேன் என்று கூறியுள்ளதால் நான் அவருக்கு தடைக்கல்லாக இருக்க விரும்பவில்லை வழிக்கல்லாக இருக்க விரும்புகிறேன், பாஜகவில் அவர் இணையட்டும் நெகட்டிவ் எனர்ஜியை பாசிட்டிவ் எனர்ஜியாக மாற்றட்டும் இதன் மூலமாக அவருக்கு அமைதி கிடைக்கட்டும் நல்ல ஒரு பாரதத்தை படைப்பதற்கு பாஜகவை பயன்படுத்திக் கொள்ளட்டும் அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். இத கட்சியின் அடையாளத்தை பயன்படுத்தி தவறு செய்ய மாட்டார் என நான் நம்புகிறேன்” என்றார்.

இதையும் படிங்க: காவிரி விவகாரம்; அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்- ஈபிஎஸ் வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.