கோயம்புத்தூர் கணபதி பகுதி சுபாஸ் நகரைச் சேர்ந்தவர் ரகுநாதன். தினசரி பத்திரிகையில் நிருபராக பணியாற்றிவருகிறார். இவர் வீட்டிற்கு அருகில் குடியிருப்பவர் ராமசந்திரன். இருவருக்கும் ஆரம்பத்தில் இருந்தே முன்பகை இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி ராமச்சந்திரன் வாழை மரத்தை அரிவாளால் வெட்டி கொண்டிருந்துள்ளார். அப்போது நிருபர் ரகுநாதன் அவரது இருசக்கர வாகனத்தை ராமசந்திரன் வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார்.
இது குறித்து இருவருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ராமச்சந்திரன் வாழை மரத்தை வெட்ட பயன்படுத்திய அரிவாளால் ரகுநாதன் தலையில் தாக்கியுள்ளார்.
இதனால், ரகுநாதன் தலையில் வெட்டு காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ராமச்சந்திரனிடம் விவகாரம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: ’மது குடிக்காதீங்க’- அறிவுரை வழங்கியவருக்கு வெட்டு: அதிரவைக்கும் சிசிடிவி காட்சி