கோவை மாவட்டம் காந்திபுரம் நூறடி சாலையில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அங்கு பணியாற்றும் ஊழியர்கள் இருவருக்கு நேற்று கரோனா தொற்று உறுதியனாது. இதையடுத்து அந்த நகைக்கடை பூட்டப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே அக்கடையில் பணியாற்றும் ஊழியர்கள் காந்திபுரம் 3ஆவது வீதியில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு தங்கி வேலை செய்யும் 42 பேருக்கு நேற்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அப்பரிசோதனையில் 13 ஊழியர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த கடையில் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது.