கோயம்புத்தூர்: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் பலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று(மே 9) இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக கருதப்படும் சயானிடம் கோவை காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் சுமார் 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிந்து வெளியில் வந்த சயான் சற்றும் தாமதிக்காமல் வேகமாக ஓடி இருசக்கர வாகனத்தில் சென்றார்.
ஊட்டி நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளும் பொழுது மிகவும் பொறுமையாக விசாரணைக்கு வந்து சென்ற சயான் தற்போது விசாரணை முடிந்து வேகமாக ஓடிச் சென்றது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: 'நிரூபிக்கவில்லையென்றால் நிர்வாணமா நடப்பியா...?' - பயில்வான் ரங்கநாதன் ஆவேசம்