உலக யோகா தினம் கொண்டாடப்படுவதையொட்டி யோகா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், குறிப்பாக பெண்களின் மனம், உடல் ஆரோக்கியத்தில் யோகாசனத்தின் மகத்துவத்தை உணர்த்துவதற்காகவும், பொள்ளாச்சி டாப்ஸ் யோகா மையம் சார்பில் பெண்கள் மட்டும் பங்கேற்ற யோகாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ரவுண்டானா அருகில் நடைபெற்ற கூட்டு யோகாசனத்தில் பள்ளி-கல்லூரி மாணவிகள் குடும்பப் பெண்கள் என 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு உலக சாதனைக்காக உற்சாகமாக யோகாசனம் செய்தனர்.
பிராணயாமம், சூரிய நமஸ்காரம், தாடாசன், ஓம் மந்திரம் உச்சரித்தல் என பல்வேறு விதமான ஆசனங்களைச் செய்தனர்.