செவிலி பணியில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து பணியாற்றியவர் நைட்டிங்கேல் அம்மையார். அவரது பிறந்த நாளான இன்று, ஆண்டுதோறும், உலக செவிலி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பலரும் செவிலியருக்கு வாழ்த்து தெரிவித்து, பதிவு வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் செவிலி தினத்தை முன்னிட்டு இன்று பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் கையில் தீப ஒளி ஏற்றி, உறுதிமொழி மேற்கொண்டனர். இந்நிகழ்வில் மருத்துவர் சுரேஷ் ஜோசப், மருத்துவர் பாணி மற்றும் மருத்துவர் தனலட்சுமி உடனிருந்தனர்.
அதேபோல் அம்மருத்துவமனையில் உள்ள செவிலியர் அனைவரும் கேக் வெட்டி இந்நாளை கொண்டாடியுள்ளனர். மேலும் சிறப்பாகப் பணியாற்றிய செவிலியருக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
இதேபோல் விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியரும், கேக் வெட்டி செவிலியர் தினத்தைக் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சர்வதேச செவிலியர்கள் தினம்: வரலாற்று பின்னணி?