வால்பாறையை அடுத்த கூழாங்கல் ஆற்று பகுதியில் கடந்த வாரம் திருப்பூர் சாமுண்டிபுரம் நகரைச் சேர்ந்த ஹரிஷ் என்ற இளைஞர், தன்னுடைய நண்பர்களுடன் வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள கூழாங்கல் ஆற்றில் குளிக்கச் சென்ற ஹரிஷ் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குவந்த வால்பாறை நகராட்சி ஆணையாளர் க. பவுன்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது ஆற்றுபகுதியில் இருந்த அபாய குழியில் சிக்கி இளைஞர் ஊயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அபாய குழியை மூட நகராட்சி ஆணையாளர் உத்தவிட்டார். அதன்படி ஜேசிபி எந்திரம் மூலம் ராட்சத பாறைகளைக் கொண்டு அபாய குழியை மூடும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். தற்போது பாறைகள் கொண்டு அந்த அபாய குழி மூடப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:மது போதையில் கல்குவாரியில் குளித்த நபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!