ETV Bharat / state

கோவையில் தீத்தடுப்புக் கோடுகள் அமைக்கும் பணி தீவிரம்

கோயம்புத்தூர்: வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்கும் வகையில் தன்னார்வலர்கள் உதவியுடன் வனத் துறையினர் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.

கோவையில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரம்

author img

By

Published : Apr 14, 2021, 12:51 PM IST

கோடைகாலம் தொடங்கியதை அடுத்து வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படாமல் இருக்க வனத் துறையினர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது வழக்கம்.

அதன்படி கோவை மருதமலை வனப்பகுதியில், கோடை காலங்களில் காட்டுத்தீ ஏற்படும்போது, மற்ற பகுதிகளுக்குத் தீ பரவாமல் தடுக்கும் வகையிலும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் வகையிலும், தீத்தடுப்புக் கோடுகள் அமைக்கும் பணி நடைபெற்றது.

கோயம்புத்தூர் வன உயிரின பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் வனத் துறை இணைந்து தீத்தடுப்புக் கோடுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டன.

தீத்தடுப்புக் கோடுகள் அமைக்கும் பணி தீவிரம்

கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின்பேரில், வனச்சரகர் சிவா தலைமையில், வேட்டைத் தடுப்புக் காவலர்கள், 40-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இப்பணிகளை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: பாடகியின் மகளுக்குப் பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் வழக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.