ETV Bharat / state

பிணையில் விட லஞ்சம்: ஆய்வாளர் உட்பட 2 பேர் ஆயுத படைக்கு மாற்றம்! - கோயம்புத்தூர் செய்திகள்

விபத்து வழக்கில் கைதானவரை பிணையில் வெளியே விட, ரூ.12 ஆயிரம் லஞ்சம் கேட்ட காவல் ஆய்வாளர், தலைமைக் காவலர் ஆயுதபடைக்கு மாற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

inspector suspend
inspector suspend
author img

By

Published : Jun 23, 2021, 7:48 PM IST

கோயம்புத்தூர்: கிணத்துக்கடவு அருகே, கடந்த 20ஆம் தேதி, நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது, பார்ச்சுனர் சொகுதசு கார் ஒன்று மோதியது. இந்த விபத்தில் ஒருவர் இறந்தார்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த கிணத்துக்கடவு காவல்துறையினர், விபத்து தொடர்பாக, பொள்ளாச்சி அருகேயுள்ள அர்த்தநாரிபாளையத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சுரேஷ் (33) என்பவரை கைது செய்தனர். விபத்தை எற்படுத்திய சொகுசு கார் நூல்மில் அதிபர் ஒருவருக்குச் சொந்தமானது.

ரூ. 12 ஆயிரம் லஞ்சம்

இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஓட்டுநரை பிணையில் விட ரூ. 20 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என, தனியார் நூல்மில் மேலாளரான ரமேஷ்குமார் என்பவரிடம், கிணத்துகடவு ஆய்வாளர் சுரேஷ் , தலைமைக் காவலர் வெங்கடாச்சலம் ஆகியோர் கேட்டுள்ளனர்.

அதற்கு தன்னிடம் 12 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருப்பதாக கூறி, அதை தலைமைக் காவலரிடம், ரமேஷ் குமார் கொடுத்துள்ளார். அவர் அந்த லஞ்சப் பணத்தை ஆய்வாளரிடம் சுரேஷிடம் கொடுத்துள்ளார்.

சிக்க வைத்த மில் உரிமையாளர்

இதுகுறித்து, ரமேஷ்குமார் நூல்மில் உரிமையாளரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அவர் காவல்துறை உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தை அடுத்து, கோவை மாவட்டகாவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் சுரேஷ், தலைமைக் காவலர் வெங்கடாசலம் இருவரையும் உடனடியாக மைக்கில் தொடர்பு கொண்டு, இருவரையும் உடனடியாக கோவை ஆயுதப்படை செல்ல உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சென்னை மைதானத்தில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.