கோயம்புத்தூர்: கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமீஷா முபீன் உயிரிழந்தார். அவரது வீட்டில் 75 கிலோ வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முபீன் மனைவி அஸ்ரத் ஒரு காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுதிறனாளி. தற்போது பெற்றோர் வீட்டில் இருந்து வருகின்றார். இந்நிலையில் ஜமீஷா முபீன் செயல்பாடுகள் சந்தேகப்படும் வகையில் இருந்ததில்லை என அஸ்ரத்தின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அஸ்ரத்தின் தாயார் குர்ஷித் கூறுகையில், “எனது மகளுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகியுள்ளது. முதலில் அவரது பெற்றோருடன் இருந்த முபின் பின்னர் எங்கள் வீட்டின் அருகே வசித்து வந்ததார். தற்போது இருக்கும் வீட்டிற்கு சென்று ஓன்றரை மாதங்கள் தான் ஆகின்றது.
குழந்தைகளை முபீன் அடித்ததில்லை. அவர் இது போன்று செய்வாரா என்பது தெரியவில்லை. புத்தக கடைக்கு வேலைக்கு சென்ற அவர், நெஞ்சு வலி காரணமாக அவ்வேலைக்கு செல்லவில்லை. கடந்த ஒரு மாதமாக தான் கார் ஒட்டி பழகினார். 5 வேளை தொழுகை, அடிக்கடி குர்ரான் வசனம் ஓதிக் கொண்டு இருப்பார். அதிகமாக பேச மாட்டார்.
நண்பர்கள் என யாரும் வீட்டிற்கு வந்ததில்லை. அவரது உறவினர் அசாருதீன் மட்டுமே அடிக்கடி அவருடன் வீட்டிற்கு வருவார். கார் வெடிப்பு சம்பவத்திற்கு முன்னர் முபீன் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் தெரியவில்லை. செயல் பாடுகளிலும் எந்த சந்தேகமும் தெரியவில்லை. இஸ்லத்தில் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர். காவல் துறையினர் வந்து விசாரணை நடத்தி சென்றனர். நாங்கள் மறைக்காமல் உண்மையை சொன்னோம்” என்றார்.
இதையும் படிங்க: உ.பி.யில் 11 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 2 பேருக்கு மரண தண்டணை!