சூலூர்: கோயம்புத்தூர் மாவட்ட சூலூர் அடுத்த அரசூர் பகுதியில் கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் பன்னாட்டு நிறுவனத்தின் எக்ஸ்பீரியன்ஸ் இன்ஜினியரிங் என்ற நவீன தொழில்நுட்ப ஆய்வு மையம் மற்றும் அருங்காட்சியக்ம் உள்ளது.
சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகத்தில், பொறியியல் வடிவமைப்புகள் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளன, அதன் செயல்பாடு எத்தகையது என்பதை விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகள், மாதிரி வடிவங்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே முதல்முறையாக இந்த வகையான அருங்காட்சியகம் கோவையில் தான் அமைக்கப்பட்டுள்ளது.
க்யூ ஆர் கோடு மூலம் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து, இந்த வடிவமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் வடிவமைப்பு குறித்தும் அறிந்து கொள்ளும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வலைதளங்களில் இதற்கான தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் அருங்காட்சியகம் குறித்த தகவல்களை அறிய வெப்சைட் உருவாக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி!