ETV Bharat / state

பட்ஜெட்டில் குறை இருந்தாலும் வரவேற்கத்தக்கது - இந்திய தொழில் வர்த்தக சபையினர்

இன்று வெளியான மத்திய பட்ஜெட்டின் சாதக பாதகங்கள், எதிர்பார்த்தது, ஏமாற்றம் அளித்தது போன்றவைகள் குறித்து இந்திய தொழில் வர்த்தக சபையினர் தெரிவித்துள்ளனர்.

author img

By

Published : Feb 7, 2023, 11:55 AM IST

Indian Chamber of Commerce said that there are small flaws in the budget but it is welcome
பட்ஜெட்டில் குறை இருந்தாலும் வரவேற்கத்தக்கது - இந்திய தொழில் வர்த்தக சபையினர்
பட்ஜெட்டில் குறை இருந்தாலும் வரவேற்கத்தக்கது - இந்திய தொழில் வர்த்தக சபையினர்

கோயம்புத்தூர்: இந்திய தொழில் வர்த்தக சபை கோயம்புத்தூர் சார்பில் இன்று வெளியான மத்திய பட்ஜெட் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பட்ஜெட்டின் சாதகம் பாதகங்களை தெரிவித்தனர். இதுகுறித்து இந்திய தொழில் வர்த்தக சபையின் கௌரவச் செயலாளர் அண்ணாமலை கூறுகையில், “இந்த நிதிநிலை அறிக்கையில் சிறு சிறு குறைகள் இருந்தாலும் ஒட்டு மொத்தத்தில் வரவேற்கத்தக்கது. பைனான்சியல், ஸ்டாக் மார்க்கெட், பேங்கிங், இன்சூரன்ஸ் போன்ற துறைக்கு இந்த பட்ஜெட்டில் ஒன்றும் அறிவிப்பு வரவில்லை.

கே.ஒய்.சி.,யில் சிங்கிள் ரெகுலேஷன் ஆக்கி உள்ளார்கள் அது வரவேற்கத்தக்கது. விவசாயம் மற்றும் விவசாய உற்பத்தியை அதிகரிப்பதற்கு இந்த பட்ஜெட் உதவும். சிறுதானியங்களுக்கு மால் கட்ட வேண்டும் என இந்த பட்ஜெட்டில் தெரிவித்துள்ளனர். கார்ப்பரேட் டேக்ஸை பொருத்தவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. குறைக்கவும் இல்லை அறிவிப்பும் இல்லை. தனிநபர் வருமான வரி குறிப்பை வரவேற்கிறோம்.

மூலப்பொருள் விலையை கட்டுப்படுத்த இந்த பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வரவில்லை. அதேபோல ஏற்றுமதி இறக்குமதி பற்றியும் அறிவிப்பு இல்லை. ஜிஎஸ்டியின் எதிரொலிதான் மூலப்பொருள் கட்டுப்பாடு இல்லாதது. ஜி.எஸ்.டியை குறைக்க வேண்டும். மொத்தத்தில் மூலப்பொருள் தொடர்பாக வெளிவராத அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. இந்த பட்ஜெட் மூலம் பல்வேறு துறையில் உள்ளவர்களுக்கு உள்ள சிறு சிறு பிரச்சனைகள் சரி செய்யப்பட்டுள்ளது.

இது விவசாயிகள் சார்ந்த நிதிநிலை அறிக்கை. சாதாரண மாத வருமானம் வாங்கும் பணியாளர்களுக்கான பட்ஜெட். தொழில்துறையைப் பொறுத்தவரை ஏமாற்றம் என்றும் சொல்ல முடியாது எதிர்பார்த்தது கிடைத்தது என்றும் சொல்ல முடியாது” என்றார்.

இதைத்தொடர்ந்து துணைத் தலைவர் சுந்தரம் கூறும்போது, “இந்த பட்ஜெட்டில் ஜிஎஸ்டியிலும் மூலப் பொருட்கள் விலை கட்டுப்பாட்டிலும் நடவடிக்கை எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சிறுகுறு தொழில்களுக்கு இந்த பட்ஜெட் மூலம் ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.
அரசு சிறுகுறு நடுத்தர தொழில்களுக்கு ஸ்பெண்டிங் அதிகளவு பண்ண வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம் அது இந்த பட்ஜெட்டில் நடந்துள்ளது.

தொழில்துறைக்கான கடன்களுக்கு நிதிகள் ஒதுக்கி உள்ளனர். மூலப்பொருள் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக தொழில் துறை நிதியை அதிகரித்துள்ளனர். திருப்திகரமான பட்ஜெட்டாக பார்ப்பதாக தெரிவித்தார்.”

இதனை தொடர்ந்து சிஐஐ தொழில் கூட்டமைப்பின் சார்பில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது நல்லது என தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து சிஐஐ தலைவர் பிரசாந்த் கூறுகையில், “இந்த பட்ஜெட்டில் டிஜிட்டல், விவசாயம், கல்வி போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல கோவை மண்டலத்தில் சிஐஐ சார்பில் டூரிசம், எம்.எஸ்.எம்.இ. கிரௌத், அக்ரீ, டேலண்ட் போன்றவைகள் தொடர்பான முயற்சிகளை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இதில் நாங்கள் அடையாளப்படுத்தியது இந்த பட்ஜெட்டில் வெளியானது மகிழ்ச்சி அளிக்கிறது” என தெரிவித்தார்.

அதேபோல சிஐஐ துணைத் தலைவர் செந்தில் கூறும்போது, “விவசாயிகளின் வருமானம் குறைவாக இருந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு பட்ஜெட்டில் தெரிவித்த விவசாயிகளுக்கான திட்டத்தை செயல்முறைக்கு கொண்டு வரும்பொழுது விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். அதேபோல டிஜிட்டல் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் மூலம் விவசாயிகள் பயனடைவார்கள்.

அதேபோல உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த அறிவிப்பு வந்துள்ளதால் தொழில்துறையில் சாதகம் ஏற்படும். பொருளாதாரம் உயரும்.
பினான்சியல் சிஸ்டம் பலப்படுவதால் சாதகமான சூழல் ஏற்படும். நாங்கள் எதிர்பார்த்தது பெரிதாக வராதது போல் தெரியவில்லை. இது ஒரு பேன் இந்தியா பட்ஜெட். எந்த ஒரு துறை என ஒதுக்காமல் எல்லா துறைகளுக்கும் இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தொழில்துறையில் மூலப்பொருள் கட்டுப்பாடு என்பது ஒரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது. ஆனால் மூலப்பொருள் பிரச்சனை சமீபமாக குறைந்து வருகிறது. தனி நபர் வருமானம் அறிவிப்பு வரவேற்புகுரியது” என தெரிவித்தார்.

இந்திய ஜவுளித்தொழில் கூட்டமைப்பின் தலைவர் ராஜ்குமார் கூறுகையில், “உலக அரங்கில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பிரகாசமாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களால் இந்திய பொருளாதாரம் சீரான வளர்ச்சியடைந்து வருகிறது. கூடுதல் நீளமான ஸ்டேயபிள் பருத்தியின் உற்பத்தித் திறனை அதிகரிக்க மத்திய அரசு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது.

கிளஸ்ட்டர் அடிப்படையில் பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பின் மூலம் கூடுதல் நீளமான பருத்தியின் உற்பத்தித் திறனை மேம்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளோம். கிராமப்புறங்களில் இளம்
தொழில் முனைவோர்களால் விவசாயம் சார்ந்த தொழில் துவங்குவதை ஊக்குவிக்கும் வகையில் வேளாண் ஆக்சிலரேட்டர் நிதி அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் வரவேற்கிறோம்.

புதிய செயற்கை நுண்ணறிவு மூலம் விவசாயப் பொருட்களின் தரவு சேகரிப்பு திட்டம், சிறந்த பயிர் மதிப்பீட்டிற்கும், பருத்தி விலையை கணிக்கவும் உதவும். விவசாயிகளுக்கான சேமிப்பு கிடங்கு கட்டமைப்புகள் உருவாக்குவது விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பருத்தியின் தரத்தையும் மேம்படுத்தும். இருப்பினும் பட்ஜெட்டில் பருத்தி மற்றும் பருத்தி கழிவுகள் மீதான 10 சதவீத இறக்குமதி வரியை
நீக்க கோரிக்கை விடுத்திருந்தோம். அது குறித்து அறிவிப்பு இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. ஜவுளி இயந்திரங்களின் இறக்குமதி வரியை 5 லிருந்து 7 சதவீதமாக ஆக அதிகரிப்பது இந்தத் துறையில் திட்டமிடப்பட்டுள்ள புதிய முதலீடுகளை பாதிக்கும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘நிதிநிலை அறிக்கை, மக்கள் விரோத அறிக்கையாகும்’ - தொல். திருமாவளவன் விமர்சனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.