கோவை: பேரூர் பச்சாபாளையம் பகுதியில் உள்ள ஆவின் பால் கம்பெனி நிறுவனத்தில் பணி நிரந்தரம் செய்யவும், பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருபவர்களுக்கு அரியர் பணம் வழங்க உயர் அதிகாரிகள் பணம் வாங்கியதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், நேற்று(மே 30) மாலை 6.30 மணியளவில் இருந்து லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி திவ்யா தலைமையில், ஆய்வாளர் பரிமளா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
ஆய்வில் முதன்மை உதவியாளராக பணியாற்றி வரும் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் காரில் ரூ.5.90 லட்சம் மற்றும் அவரது அலமாரியில் இருந்து ரூ.2.50 லட்சம் கணக்கில் வராத பணம் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து கிருணஷ்மூர்த்தி மற்றும் பணம் கொடுத்தவர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். காலை வரை சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 2 கிலோ தங்க செயினில் 3 மி.கி. மட்டுமே தங்கம்: ரூ.1 லட்சத்துடன் தப்பியவர்களை தேடும் போலீஸ்!