ETV Bharat / state

கோவை கேசிபி அலுவலகத்தில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை - velumani

அதிமுக தெற்கு புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளரான வடவள்ளி சந்திர சேகர் பங்குதாரராக இருந்து வரும் கேசிபி அலுவலகத்தில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்

கோவை கேசிபி அலுவலகத்தில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

author img

By

Published : Jul 7, 2022, 2:29 PM IST

கோயம்புத்தூர்: அதிமுக தெற்கு புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளரான வடவள்ளி சந்திர சேகர், கேசிபி என்ற தனியார் நிறுவனத்தின் பங்குதாரராக இருந்து வருகிறார். மேலும் இவர் அதிமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான நமது அம்மாவின் வெளியீட்டாளர் ஆவார்.

அதிமுக ஆட்சி காலத்தில் அதிகளவில் மாநகராட்சி பணிகள், ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு டெண்டர் பணிகள் இந்நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, ஒப்பந்தம் உள்ளிட்ட விஷயங்களில் தலையிட்டதாக சந்திரசேகர் மீது திமுக மற்றும் அறப்போர் இயக்கம் புகார் அளித்திருந்தது.

இந்நிலையில் நேற்று (ஜூலை 6) இவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அலுவலர்கள் சுமார் 8 பேர் சோதனை மேற்கொண்டனர். நேற்று மாலை வரை கேசிபி அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: ஐபிஎஸ் அதிகாரி போல் நடித்து ஏமாற்றியவரை பிடிக்க ஆந்திரா விரைந்த போலீசார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.