ETV Bharat / state

பொள்ளாச்சியில் காட்டு யானையை பிடிக்க வனத்துறை தீவிரம்! - காட்டு யானையை பிடிக்க வனத்துறை தீவிரம்

கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் அட்டகாசம் செய்துவரும் காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

பொள்ளாச்சியில் காட்டு யானையை பிடிக்க வனத்துறை தீவிரம்!
author img

By

Published : Nov 11, 2019, 1:22 PM IST

பொள்ளாச்சியில் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைத்துள்ளது அர்தநாரிபாளையம் கிராமம். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாகவே காட்டு யானை அட்டகாசம் செய்துவருகிறது. இதில் இந்த பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவதோடு விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அர்தனாரி பாளையம் பகுதி விவசாயிகள் யானையை பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து, ஆனைமலை புலிகள் காப்பக இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் விவசாயிகள் களைந்து சென்றனர்.

இதனையடுத்து நேற்று முன்தினம் அர்தனாரி பாளையம் பகுதியில் உள்ள ராதாகிருஷ்னின் தோட்டத்தில் புகுந்த காட்டுயானை, பயிடிருந்த தென்னை மரங்களை சேதப்படுத்தியதோடு விரட்ட சென்ற ராதாகிருஷ்ணனையும் கொன்றது. இதனால் நேற்றும் இன்றும் என இரு தினங்களாக யானையை பிடிக்க வனத்துறையினர் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த காட்டு யானை தற்போது அர்தநாரிபாளையம் பகுதியில் உள்ள குண்டுருட்டி பள்ளம் வனப்பகுதியில் புகுந்துள்ளதை அறிந்த வனத்துறையினர் 70க்கும் மேற்பட்டோர் உலாந்தி வனசரகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட கலீம் மற்றும் பாரி ஆகிய இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் முகாம் அமைத்து யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயன்று வருகின்றனர். இந்த ஆட்கொல்லி யானையானது கடந்த மே மாதம் மாகாளி மற்றும் ரஞ்சனா ஆகிய இருவரை கொன்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...ஆற்றைக் கடந்து கல்வி கற்கும் அவலம்! கவனிக்குமா தமிழ்நாடு அரசு?

Intro:பொள்ளாச்சி அடுத்த அடுத்த அர்த்தநாரி பாளையம் குண்டுருட்டி பள்ளம் பகுதியில் காட்டு யானை அரிசி ராஜா தஞ்சம் யானையை வனத்துறையினர் சுற்றி வளைத்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தீவிரம்.Body:பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைத்துள்ளது  அர்தனாரிபாலையம் கிராமம் இந்த பகுதியில்   கடந்த சில நாட்களாகவே காட்டுயானை அட்டகாசம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள தென்னை வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவதோடு விவசாயிகளையும் அச்சுறுத்தி வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அர்தனாரி பாளையம் பகுதி விவசாயிகள் ஆனைமலை புலிகள் காப்பக இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் பின்னர் யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் விவசாயிகள் களைந்து சென்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அர்தனாரி பாளையம் பகுதியில் உள்ள ராதாகிருஷ்ணன் என்பவரது தோட்டத்தில் புகுந்த காட்டுயானை பயிட்டுள்ள தென்னை மரங்களை சேதப்படுத்தியதோடு விரட்ட சென்ற ராதாகிருஷ்ணனனையும் அடித்து கொன்றது. இதையடுத்து இன்று இரு தினங்களாக யானையை பிடிக்க வனத்துறையினர் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த காட்டு யானை தற்போது அர்தனாரி பாளையம் பகுதியில் உள்ள குண்டுருட்டி பள்ளம் வனப்பகுதியில் தஞ்சம் புகுந்துள்ளதை அறிந்த வனத்துறையினர் 70க்கும் மேற்பட்டோர் உலாந்தி வனசரகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட கலீம் மற்றும் பாரி ஆகிய இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் முகாம் அமைத்து யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயன்று வருகின்றனர். இந்த ஆட்கொல்லி யானையானது கடந்த மே மாதம் மாகாளி மற்றும் ரஞ்சனா ஆகிய இருவரை கொன்றது குறிப்பிடத்தக்கது.Conclusion:தற்போது இந்த யானையை பிடிக்க மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் ஆனைமலை புலிகள் காப்பக இணை இயக்குனர் மாரிமுத்து கால்நடை மருத்துவர் சுகுமார் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் காட்டு யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.