ETV Bharat / state

கனரா வங்கியில் பொருத்தப்பட்டிருந்த ஸ்கிம்மர் கருவி கண்டுபிடிப்பு - ஸ்ம்மர் கருவி கண்டுபிடிப்பு

கோவை: சூலூர் அருகே கனரா வங்கி ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டதை பயனாளி கண்டுபிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனரா வங்கியில் பொருத்தப்பட்டிருந்த ஸ்ம்மர் கருவி கண்டுபிடிப்பு!
author img

By

Published : Jul 27, 2019, 5:37 PM IST

கோவை மாவட்டம் சூலூர் அருகே கனரா வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. அங்கு சிங்காநல்லூரைச் சேர்ந்த நந்தகுமார்(38) என்பவர் பணம் எடுக்க ஏடிஎம் வந்துள்ளார்.

அப்போது வங்கி கார்டை இயந்திரத்தில் செலுத்தியபோது, அது சிக்கிக்கொண்டது. அதனால் நந்தகுமார் கார்டை வேகமாக இழுத்துள்ளார். அப்போது, கார்டுடன் சேர்ந்து இயந்திரத்தில் இருந்து ஒரு கருவியும் வந்தது. இதனால் சந்தேகமடைந்த நந்தகுமார், ஏடிஎம் இயந்திரத்தை பார்த்தபோது அதில் கேமராவுடன் கூடிய ஒரு கருவி ஒட்டிவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

கனரா வங்கியில் பொருத்தப்பட்டிருந்த ஸ்ம்மர் கருவி கண்டுபிடிப்பு!

இதுகுறித்து வங்கி மேலாளருக்கும், சூலூர் காவல் துறைக்கும் நந்தகுமார் தகவல் கொடுத்துள்ளார். அங்கு வந்த சூலூர் சிறப்பு காவல் அதிகாரி செந்தில்குமார், அந்த குறிப்பிட்ட இயந்திரத்தை ஆய்வு செய்தார். பின்னர் நந்தகுமார் சூலூர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Intro:சூலூர் அருகே பாப்பம்பட்டிபிரிவில் கனரா வங்கி ஏ.டி.எம்.மில் ஸ்ம்மர் கருவி பொருத்தப்பட்டுள்ளது.கண்டுபிடிக்கப்பட்டுள்ளது...

Body:
கோவை மாவட்டம் சூலூர் அருகே பாப்பம்பட்டிபிரிவில் கண்ணம்பாளையம் கனரா வங்கி ஏ.டி.எம் உள்ளது. அங்கு மின்சார ஒப்பந்த வேலை செய்யும் சிங்காநல்லூரை சேர்ந்த நந்தகுமார்(38) என்பவர் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ 10,000 எடுக்க ஏ.டி.எம் வந்துள்ளார். அங்கு அவரது வங்கி கார்டை சொருகியபோது அது இயதிரத்தில் சிக்கிக்கொண்டது. அதை இழுத்தபோது கார்டுடன் சேர்ந்து இயந்திரத்தில் இருந்து ஒரு கருவி உடன் வந்துள்ளது. அதில் சந்தேகமடைந்த நந்தகுமார் ஏ.டி.எம் இயதிரத்தை பார்த்தபோது அதில் கேமராவுடன் கூடிய ஒரு கருவி ஒட்டிவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதை பிடுங்கிய நந்தகுமார் வங்கி மேலாளருக்கும் சூலூர் காவல் துறைக்கும் தகவல் கொடுத்துள்ளார். அங்கு வந்த சூலூர் சிறப்பு காவல் அதிகாரி செந்தில்குமார் அந்த குறிப்பிட்ட இயந்திரத்தை ஆய்வு செய்தார். பின்னர் நந்தகுமார் சூலூர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். இதுபற்றி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சூலூர் காவல்துறை ஆய்வாளர் தங்கராஜ் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.