ETV Bharat / state

கோவையில் எரிந்த நிலையில் கிடந்த திருநங்கை சடலம்.. போலீசார் விசாரணை! - திருநங்கை கொலை

கோவையில் நேற்று எரிந்த நிலையில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது அது திருநங்கை ஒருவரிடம் சடலம் என கண்டறியப்பட்டுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணங்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Police investigation into burnt body of transgender found in Coimbatore
கோவையில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட திருநங்கையின் உடல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
author img

By

Published : May 9, 2023, 1:43 PM IST

கோவை: காந்திபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் நேற்றைய தினம் எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல் இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காட்டூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் காவல்துறையினர் அங்குச் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், அவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்ற அடிப்படையில் விசாரணை துவங்கிய நிலையில், இப்பகுதி காட்டூர் காவல் நிலைய எல்லைக்குள் வருகிறதா அல்லது ரத்தினபுரி காவல் நிலைய எல்லைக்குள் வருகிறதா என்ற வாதமும் எழுந்த நிலையில் இறுதியாக அப்பகுதி ரத்தினபுரி காவல் நிலைய எல்லைக்குள் வருவதாக தெரிவிக்கப்பட்டு தற்போது ரத்தினபுரி காவல்துறையினர் இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்தது திருநங்கை என தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்த திருநங்கை அதே பகுதியை சேர்ந்த அபிராமி என தெரியவந்துள்ளது. இதனை அடுத்து திருநங்கையின் மரணம் தொடர்பாக ரத்தினபுரி காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இது கொலையாக இருக்கக்கூடும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஹைதராபாத் பெண் உட்பட 9 பேர் பலி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.