நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சில இடங்களுக்கு தளர்வு அறிவித்து கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பல எதிர்ப்புகளையும் கடந்த 7ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் தமிழ்நாட்டில் திறக்கப்பட்டன.
இதனையடுத்து மது பிரியர்கள் தகுந்த இடைவெளி, மாஸ்க் இல்லாமல் வரிசையில் நின்ற வீடியோக்கள் வைரலானது. அதே சமயம் நேற்று கரோனா வைரஸ் தொற்றும் 600 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. இதற்கு டாஸ்மாக் கடையும் முக்கிய காரணம் என்று பலரும் தெரிவித்த நிலையில் டாஸ்மாக் கடையை இன்று முதல் மூட சென்னை உயர் நீதிமன்றம் நேற்று மாலை உத்தரவிட்டது.
அதன்படி, இன்று முதல் தற்காலிகமாகக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் டாஸ்மாக் கடை உரிமையாளர்கள் அவர்களது கடைகளில் உள்ள மது பாட்டில்களை பாதுகாக்க கடைகளில் கதவுகளுக்கு வெல்டிங் வைக்க முடிவு செய்து முதலில் செல்வபுரம் பகுதியில் உள்ள கடை ஒன்றிக்கு வெல்டிங் வைத்தனர். இதே போன்று கோவையில் பல மது கடை உரிமையாளர்களும் இதை செய்ய முடிவெடுத்துள்ளனர்.
முன்னதாக சில இடங்களில் மதுக்கடையில் கதவை உடைத்து மது பாட்டில்களையும் திருடிச்சென்ற சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...சவுதியிலிருந்து 153 பயணிகள் கேரளா வருகை!