ETV Bharat / state

"தமிழகத்திற்கு தான் விண்கல ஏவுதளம் வரவேண்டியது.. அதை திமுகவினர் கெடுத்தனர்" - அண்ணாமலை! - Annamalai said space launch pad should came to TN

Annamalai said space launch pad should came to Tamilnadu: கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நாகப்பட்டினத்திற்கு வரவேண்டிய விண்கல ஏவுதளத்தை திமுகவினர் கெடுத்தனர் என குற்றம் சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 2:35 PM IST

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

கோயம்புத்தூர்: சென்னை செல்வதற்காக கோயம்புத்தூர் விமான நிலையம் வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "பாரதியார் கனவு நேற்று நனவாகியுள்ளது. இதுவரை யாரும் செல்லாத நிலவின் தென் துருவத்திற்கு இந்தியா சென்று சாதனை படைத்துள்ளது.

இது அனைவருக்கும் கிடைத்த பெருமை. கடந்த காலங்களில் உலக நாடுகள் இந்தியாவை கிண்டல் செய்த நிலையில், தனித்துவமான நாடாக இந்தியா உருவாகியுள்ளது. ஐ.எஸ்.ஆர்.ஓவிற்கும், தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய பந்தம் உள்ளது. முதலில் இந்திய விண்கல ஏவுதளம் நாகப்பட்டினத்திற்கு வர வேண்டியது.

இது குறித்த கூட்டத்திற்கு அப்போது ஆட்சியில் இருந்த திமுக அமைச்சர்கள் 4 மணி நேரம் தாமதமாகவும், தள்ளாடி தள்ளாடி வந்ததாலும் இந்திய விண்கல ஏவுதளம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு சென்றது. இரண்டாவது விண்கல ஏவுதளம் குலசேகரபட்டினத்தில் அமைக்க வேண்டிய கடமை திமுக அரசிற்கு உள்ளது. சந்திரயான் திட்டத்தில் பணியாற்றிய மூவரும் தேசியத்தை நம்பும் தேசிய தமிழர்கள்.

பொன்முடி, ஈவிகேஎஸ் இளங்கோவன் நடக்க முடியாமல் ஏசி ரூமில் இருந்து அரசியல் செய்கிறார்கள். அரசியல் மாறிவிட்டது என்பதை பொன்முடி புரிந்து கொள்ள வேண்டும். மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். 23 நாளில் 128 கி.மீ நடந்துள்ளோம். 234 தொகுதிகளிலும் நடந்த முதல் கட்சியாக பாஜக இருக்கும். பாஜகவின் நடைபயணத்தால் அரசியல் புரட்சி நடக்கும். இந்த நடைபயணத்தில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களும் நடந்துள்ளார்கள்.

நடைபயணத்தில் பகவத் கீதையை விட பைபிள், குர்ஆன் அதிகமாக வந்துள்ளது. எனது பூஜை அறையில் பைபிள், குர்ஆன் உள்ளது. பாஜகவை இந்துத்துவக் கட்சி என எத்தனை நாளுக்கு சொல்ல முடியும்?. பாஜக மீதான பிம்பம் உடைந்து அனைவருக்கும் உழைக்கும் கட்சியாக உள்ளது. அரசியல் மாறிவிட்டது. களம் மாறிவிட்டது. நீட் மசோதாவில் ஆளுநர் ரோல் எதுவும் இல்லை. குடியரசுத் தலைவர் முடிவு எடுக்க வேண்டும்.

ஆளுநரை திமுகவினர் பேசும் முறை சரியல்ல. ஆளுநர் திமுக சவாலை ஏற்று தனது மாநிலமான பீகாருக்கு வரச்சொன்னால் என்ன செய்யலாம்?. வாய் உள்ளது என திமுகவினர் பேசக்கூடாது. சம்மந்தம் இல்லாமல் ஆளுநரை வம்பு இழுக்கிறார்கள். டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமன மசோதாவை திருப்பி அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது. ஆளுநருக்கும் அரசுக்கும் இடையேயான தொடர்பு குறித்து தலைமை செயலாளர் பதில் சொல்ல வேண்டும்.

இது குறித்து பதில் சொல்ல திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு என்ன உரிமை உள்ளது?. காவிரி பிரச்சினைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தான் காரணம். இதில் இடியாப்ப சிக்கலை உருவாக்கி முதலமைச்சர் ரசிக்கிறார். எல்லா சமுதாயமும் தனித்திறமையால் மேலே வந்து கொண்டுள்ளது. நாடார் சமுதாயத்தில் இந்து, கிறிஸ்துவர்கள் என பிரச்சனை கொண்டு வந்தது கருணாநிதி. ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்துவது திமுகவின் முதல் கடமையாக உள்ளது.

இது கண்டிக்கத்தக்கது. எல்லாருக்கும் சாதி அடையாளம் கொடுப்பது அருவருக்கத்தக்க செயல். ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி எதுவும் நடக்காது. காவல்துறைக்கு தான் சிரமம். அதிமுக மாநாடு அந்த கட்சிக்கு முக்கிய மாநாடு. மாநாடு என்றால் சில குறைகள் இருக்கத்தான் செய்யும். அதுகுறித்து நாம் கருத்து சொல்ல எதுவும் இல்லை" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோவையில் ஒரு புதிய யானை பாதை! வனத்துறை முயற்சிக்கு கிடைத்த வெற்றி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.