ETV Bharat / state

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு - குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு

கோவை: போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட ஜோஸ்வா
author img

By

Published : Sep 20, 2019, 9:28 AM IST

கோவை புலியகுளம் அருகேயுள்ள அம்மன் குளம் ஏரிமேட்டை சேர்ந்தவர் ஜோஸ்வா(30). இவர், கடந்த ஜூன் மாதம் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கிலும், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து குற்ற சம்பவங்களி்ல் ஈடுபட்டு வந்த ஜோஸ்வாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் உத்தரவிட்டார். இதையடுத்து ஜோஸ்வா குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது கோவையில் முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க:

போக்சோ சட்டத்தின் கீழ் கைதான ஆட்டோ ஓட்டுநருக்கு 27 வருடம் சிறை தண்டனை!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்; போக்சோ சட்டத்தில் சிறையில் அடைப்பு!

Intro:போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது..Body:கோவை புலியகுளம் அருகேயுள்ள அம்மன் குளம் ஏரிமேட்டை சேர்ந்தவர் ஜோஸ் என்ற லூயிஸ் என்ற ஜோஸ்வா(30). இவர், கடந்த ஜூன் மாதம் போக்சோ சட்டத்தில் கிழக்குப்பகுதி அனைத்து மகளிர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து குற்ற சம்பவங்களி்ல் ஈடுபட்டு வந்த ஜோஸ்வாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் இன்று உத்தரவிட்டார். இதையடுத்து ஜோஸ்வா குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கோவை மாநகரில் முதல் முறையாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் கவுதம் என்ற கருப்பு கவுதம்(25). பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த இவர், கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி குற்ற விசாரணை முறைச் சட்டம் 107 பிரிவின் படி, மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையரும், செயல்துறை நடுவருமான பாலாஜி சரவணன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அதிலிருந்து ஓராண்டுக்கு எந்த குற்றத்திலும் ஈடுபடக்கூடாது என அவரிடம் உறுதிமொழிப் பத்திரம் எழுதி பெறப்பட்டது. ஆனால், கடந்த 5-ம் தேதி நடந்த அடிதடி வழக்கில் கவுதம் ரத்தினபுரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து சிறையில் இருந்து கடந்த 17-ம் தேதி கவுதம் வெளியே வந்தார்.

ஓராண்டுக்கு எந்த குற்றத்திலும் ஈடுபட மாட்டேன் என்ற உறுதிமொழியை மீறியதால், ரத்தினபுரி காவல்துறையினர், கவுதமை நேற்று மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர். உறுதிமொழியை மீறியதால், இன்றிலிருந்து வரும் 2020-ம் ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி வரை 200 நாட்கள் கவுதமை சிறையில் அடைக்க துணை ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து கவுதம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.