ETV Bharat / state

சுற்றுச்சூழலைப் பாதிக்கும் செங்கல் சூளைகள்; குற்றஞ்சாட்டும் சமூக ஆர்வலர்கள்!

கோவை: தடாகம் பகுதியில் செங்கல் சூளைகள் சீல் வைக்கப்பட்டதால், தொண்டாமுத்தூர் பகுதியில் செங்கல் சூளைகள் அதிகளவில் அமைக்கப்பட்டு செம்மண் எடுக்கப்படுவது சுற்றுச்சூழலை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சமூக ஆர்வலர்
மேக் மோகன்
author img

By

Published : Apr 24, 2021, 3:04 PM IST

கோவை மாவட்டம், மாங்கரை, தடாகம், சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் சட்ட விரோதமாக இயங்கி வந்தது. இந்தச் சூளைகளால் அப்பகுதியில் விவசாய நிலம், பஞ்சமி நிலம், கோயில் நிலம், வருவாய்த் துறைக்குச் சொந்தமான நீர்நிலைகள் என, சுமார் 9,500 ஏக்கருக்கு மேல் 50 அடி ஆழம் முதல் 150 அடி வரை வளமிக்க செம்மண், களிமண், வண்டல் மண் தோண்டி எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், மாவட்ட ஆட்சியரின் ஆணைப்படியும் 186 செங்கல் சூளைகள் இயங்க தடை விதிக்கப்பட்டு, அவற்றின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனையடுத்து சட்ட விரோதமாகச் செம்மண் அள்ளுவது நிறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், நிரந்தரமாக மூட கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தநிலையில், தடாகம் பள்ளத்தாக்குப் பகுதியில் செம்மண் எடுக்க உயர் நீதிமன்ற தடை உள்ளதால், தொண்டாமுத்தூர் பகுதியில் செங்கல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சுற்றுச்சூழல் ஆர்வலர் மேக் மோகன் சிறப்பு பேட்டி

இதுதவிர குப்பேபாளையம், தாளியூர் தேவராயம்பாளையம் ஆகிய பகுதிகளில் புதிதாகச் செங்கல் சூளைகள் அமைக்கப்பட்டுவருகின்றன. இதற்காக மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் பல அடி ஆழத்துக்குச் செம்மண் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது.

தனியார் நிலங்கள், மலைப் பகுதியை ஒட்டியுள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் அளவுக்கு அதிகமாக செம்மண் வெட்டி எடுக்கப்படுவதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் மேக் மோகன் கூறுகையில், " தடாகம் பகுதியில் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் செங்கல் சூளைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த இரு ஆண்டுகளாக தொண்டாமுத்தூர் பகுதியில் மெல்ல மெல்ல வளர்ந்து வந்த செங்கல் சூளைகள் தற்போது அதிகமாக உருவாகி வருகிறது.

இதற்காக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் செம்மண் வெட்டி எடுக்கப்படுவதால் அங்கு சூழலியல் மாறுபாடு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள நொய்யல் நதிக்கு வரக்கூடிய இருபதுக்கும் மேற்பட்ட சிற்றோடைகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், போளுவாம்பட்டி வனச்சரகம் யானைகளின் மலைப்பாதையில் முக்கிய பகுதியாகும். அங்கு பல நூறு அடிக்கு மண் வெட்டப்படுவதால் யானைகளின் வலசை பாதை பாதிக்கும் அபாயம் உள்ளது.

மாவட்ட நிர்வாகம் இதைக் கருத்தில் கொண்டு உடனடியாக செங்கல் சூளைகளுக்கு மண் எடுப்பதைத் தடுப்பதற்கும், புதிதாக செங்கல் சூளைகள் அமைப்பதற்கும் தடை விதிக்கவும் வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் கூறுகையில், "தொண்டாமுத்தூர் பகுதியில் செங்கல் சூளை அமைப்பதற்கு யாரும் அனுமதி வாங்கவில்லை. இதுகுறித்து புகார் வந்தால் உடனடியாக ஆய்வு செய்யப்படும்.

ஏற்கனவே அனுமதி இன்றி இயங்கி வந்த செங்கல் சூளைகளுக்குச் சீல் வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் வேறு எங்காவது அனுமதி பெறாமல் செங்கல் சூளைகள் அமைக்கப்பட்டால், அவற்றின் மீதும் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

இதையும் படிங்க: இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்றவர்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.