ETV Bharat / state

கோயம்புத்தூரில் மனைவியின் கண்முன்னே கணவர் தற்கொலை - Suicide in tamilnadu

கோயம்புத்தூரில் மனைவியின் கண்முன்னே கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மனைவியின் கண்முன்னே கணவர் தற்கொலை
மனைவியின் கண்முன்னே கணவர் தற்கொலை
author img

By

Published : Jan 28, 2023, 9:26 AM IST

கோயம்புத்தூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வசித்து வந்தவர் பாலமுருகன் (41). இவரது மனைவி மஞ்சுளா. பாலமுருகனுக்கு கடந்த சில தினங்களாக கால் வலி மற்றும் மன அழுத்தம் காரணமாக அவதியுற்று வந்துள்ளார். அதற்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் பாலமுருகன் மற்றும் மஞ்சுளா இருவரும், நேற்று முன்தினம் (ஜன.26) மீண்டும் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

தற்கொலையை தவிர்த்திடுக
தற்கொலையை தவிர்த்திடுக

சிகிச்சை முடித்துவிட்டு பேருந்து மூலம் ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது சிங்காநல்லூர் சாலை வரதராஜா மில்க் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி உள்ளனர். அந்த நேரத்தில் பாலமுருகன் நொடிப்பொழுதில் மனைவியின் கண்முன்னே தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பீளமேடு காவல் துறையினர், அவரது உடலை கைப்பற்றி இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிவடைந்து, உடலானது அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் காதலால் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.