ETV Bharat / state

இனியும் கோயில்களுக்கு யானைகள் தேவையா?

author img

By

Published : Feb 24, 2021, 7:16 PM IST

யானைகள் புத்துணர்வு முகாமில் பாகன்களாலேயே கோயில் யானை தாக்கப்பட்டுள்ளது. கோயில் யானைகளும் காட்டுயிர்தான். அவற்றை பல்வேறு இன்னல்களில் இருந்து காக்க அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த ஈடிவி பாரத்தின் சிறப்பு செய்தி தொகுப்பு இதோ.

How to avoid atrocities perpetrated on temple elephants

கோவை மாவட்டம் டாப்சிலிப் யானைகள் முகாமில் 28 யானைகளும், நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் 28 வளர்ப்பு மற்றும் கும்கி யானைகளும் உள்ளன. கும்கி யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகளை விரட்டவும், அவற்றை பிடித்து முகாமுக்கு கொண்டு செல்லவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு முழுவதும் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்கள் மற்றும் தனியார் மடங்களில் 25க்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகள் உள்ளன. இந்த வளர்ப்பு யானைகள் கோயில் மற்றும் மடங்களில் மட்டும் நிறுத்தி வைக்கப்படுவதால், அவை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்பிற்குள்ளாகின்றன. இந்த பாதிப்புகளை களையும் நோக்கில் ஆண்டுதோறும் யானைகள் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டுவருகிறது.

ஆரம்ப காலகட்டத்தில் நீலகிரி மாவட்டம் முதுமலையில் நடைபெற்று வந்த யானைகள் புத்துணர்வு முகாம், கடந்த ஒன்பது ஆண்டுகளாக கோவை மாவட்டம் தேக்கம்பட்டி பகுதியில் உள்ள பவானி ஆற்று படுகையில் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் இந்த புத்துணர்வு முகாமில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் வளர்க்கப்படும் 22 யானைகளும், புதுச்சேரி மற்றும் தமிழக மடங்களை சேர்ந்த நான்கு யானைகளும் என மொத்தம் 26 யானைகள் பங்கேற்றுள்ளன.

முகாமிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யாவை அதன் பாகன் மற்றும் உதவியாளர் ஆகியோர் தாக்கும் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட யானை பாகன் வினில்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது மட்டுமின்றி, அவர்கள் இருவரையும் வனத்துறையினர் வளர்ப்பு யானைகள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து கோபிசெட்டிபாளையம் கிளை சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் இதுபோன்ற கொடுமைகள் கோயில் யானைகளுக்கு தொடர்ச்சியாக நிகழ்ந்து வருவதாகவும், இந்தக் கொடுமைகளிலிருந்து யானைகளை காப்பாற்ற கோயிலில் வளர்க்கப்படும் யானைகள் முகாமிற்கு மாற்றப்படவேண்டும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பிவருகின்றனர். இதுகுறித்து ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாசன் ஈடிவி பாரத்திடம் கலந்துரையாடினார்.

அப்போது, "வளர்ப்பு யானைகள் குறித்து சில முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். யானை வீட்டு விலங்குகள் அல்ல. இவை கோயில் அல்லது வீடுகளில் வளரும் காட்டு விலங்கு என்ற புரிதல் நமக்கு மிகவும் தேவைப்படுகிறது. காட்டில் உள்ள யானைகளுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலோ அல்லது யானைகளால் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலோ மட்டுமே தலைமை வனப்பாதுகாவலர் அனுமதியோடு காட்டு யானைகளைப் பிடிக்க முடியும்.

காட்டு யானைகளைப் பிடித்து, அவற்றை வளர்ப்பு யானைகளாக மாற்றுவது மிகவும் கொடுமையான ஒன்று. இதனால் அவை பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடுகின்றன. ஆப்பிரிக்க யானைகளை காட்டிலும் மக்களுடன் மிக எளிதில் பழகும் திறன் கொண்டது ஆசிய யானைகள். அவை மிக எளிதில் நம்முடைய தேவைகளை புரிந்துகொள்ளும் அறிவுத்திறன் கொண்டது. தமிழக வனத்துறையினர் மட்டுமே வெறும் குச்சிகளைக் கொண்டு யானைகளுடன் பழகும் திறன்கொண்டுள்ளனர். அவர்கள் மிக அரிதாகவே அங்குசத்தை யானைகளிடம் பயன்படுத்துகின்றனர். அதில் அவர்கள் நிபுணத்துவமும் பெற்றுள்ளனர்.

இதன் காரணமாக யானைக்கும் அவர்களுக்கும் ஒரு பிணைப்பு ஏற்படுகிறது. யானையை அடித்து வளர்த்தாலும், அவர்களுக்குள்ளான பந்தம் மாறுவதில்லை. அதே சமயம் எப்பொழுதும் யானையை அடித்து வளர்ப்பதை அங்கிகரிக்க முடியாது. இதன் நீட்சியே கோயில் யானையை பாகன்களே மிருகத்தனமாக தாக்கியது. பாகன்களின் இந்தச் செயலால் இனி கோயில்களுக்கு யானைகள் தேவையா என்ற கேள்வி எழுகிறது.

யானை என்பது காட்டுயிர், அது காட்டில்தான் இருக்க வேண்டும். தற்போது கோயில்களில் உள்ள யானைகள் முறையாக பராமரிப்பதில்லை என்ற தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், கோயில்களுக்கு இனி புதிதாக யானைகளை வாங்க கோயில் நிர்வாகம் முன்வரக்கூடாது. பல்வேறு கோயில்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளிலும் யானைகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்பதற்கான சான்றுகளும் உள்ளன.

இந்த கோயில் யானைகளை புத்துணர்ச்சி முகாம்களுக்கு அழைத்துச் செல்வதைக் காட்டிலும், அவை முழுக்க முழுக்க முகாம் யானைகளாக மாற்றப்பட வேண்டும். கோயில் யானைகளை வனத்துறை முகாமுக்குக் கொண்டு செல்லக்கூடாது. ஏனெனில், பல யானைகளுக்கு காசநோய் உள்ளிட்ட நோய்கள் உள்ளதால் அவை மற்ற யானைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இவற்றிற்காக தனி முகாம் ஏற்படுத்த வேண்டும். வனப்பகுதியை ஒட்டியுள்ள இடத்தில் கோயில் யானைகள் பராமரிக்கப்பட்டால் அவைகளுக்கு நல்ல தீர்வு ஏற்படும். கோயில் யானைகள் பிற யானைகளை சந்திக்கும் போது புத்துணர்வு ஏற்படும் என்ற நோக்கிலே புத்துணர்வு முகாம்கள் நடைபெறுகின்றன. ஆனால் வெகு தொலைவிலிருந்து இந்த யானைகள் முகாம்களுக்கு அழைத்து வரப்படுவதால், யானைகளுக்கு அசவுகரியம் ஏற்படுகிறது. இவற்றைக் களையும் பொருட்டு அந்தந்த பகுதியிலேயே புத்துணர்வு முகாம் நடத்தப்பட வேண்டும்.

அதுமட்டுமின்றி, தற்போது உள்ள பாகன்களுக்கு பதிலாக பழங்குடியினரை யானை பாகன்களாக நியமிக்க வேண்டும் அல்லது பாகன்கள் நீட்டிக்கப்பட வேண்டுமென்றால் யானை வளர்ப்பு மேலாண்மை குறித்த சிறப்பு பயிற்சி வழிகாட்டு நெறிமுறைகளை அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். அவற்றை பாகன்கள் நடைமுறைபடுத்துகிறார்களா? என்பதை தொடர்ந்து கண்காணிக்கவும் வேண்டும்.

காடுகளின் ஊடே நடந்து பழகிய யானைகளை, வளர்ப்பு யானைகளாக மாற்றி சிமெண்ட் தரையில் நிற்க வைப்பதும், தார் சாலையில் நடக்க வைப்பதும் போன்ற கொடுமையான செயல்களும் அரங்கேறி வருகின்றன. இவை காட்டுயிர்கள் மீது நடத்தப்படும் வன்முறை. இந்தக் கொடுமையில் இருந்து யானைகள் விடுவிக்கப்பட வேண்டுமென்றால், யானைகள் கோயில்களிலும் வீடுகளிலும் வளர்க்க முடியாத சூழலை உருவாக்க வேண்டும்.

இனியும் கோயில்களுக்கு யானைகள் தேவையா?

இவற்றைப் பராமரிப்பதற்கென ஒரு திட்டம் இல்லாததாலே, இதுபோன்ற நிலை ஏற்படுகிறது. தற்போது கோயிலில் உள்ள யானைகள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த யானைகளை பராமரிக்க வனத்துறை, கால்நடை பராமரிப்பு துறை ஆகியவை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

முகாமில் யானைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் அனைத்தும் கோயில்களிலும் தொடர்ச்சியாக நடைபெறவேண்டும். யானைகளை கண்காணித்து அதன் உடல் எடை, உணவு பராமரிப்பு குறித்து உறுதி செய்ய வேண்டும். இவற்றிற்கான நிதியை கோயில் நிர்வாகம் ஒதுக்க வேண்டும். இதனை கண்காணிக்கும் பொறுப்பை அறநிலைத்துறையே எடுத்துக்கொள்ளவேண்டும்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அரசு முடிவெடுக்க வேண்டும். கோயில் யானைகள், வளர்ப்பு யானைகளை இனியும் வைத்திருக்க வேண்டுமா? பழங்குடியினர் யானைகளை பராமரிக்கலாமா? என்பது குறித்து அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும். இதன்மூலம் யானைகள் மீது நடத்தப்படும் கொடுமைகளிலிருந்து குறைந்தபட்ச விடுதலையாவது கிடைக்கும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.