ETV Bharat / state

கோயில்களை காப்போம்! கோவையை காப்போம் - இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Apr 25, 2022, 11:20 AM IST

தேச பக்தி உள்ளவர்களை இழிவுபடுத்துவதே திமுகவினரின் வாடிக்கை என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

hindu-munnani-demonstration-for-save-the-temples-and-defend-coimbatoreதிமுக வன்முறைக்கே பிறந்த கட்சி - இந்து முன்னணி மாநில தலைவர்... OR கோவில்களை காப்போம்! கோவையை காப்போம் - இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
hindu-munnani-demonstration-for-save-the-temples-and-defend-coimbatore திமுக வன்முறைக்கே பிறந்த கட்சி - இந்து முன்னணி மாநில தலைவர்... OR கோவில்களை காப்போம்! கோவையை காப்போம் - இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

கோயம்புத்தூர் காந்திபுரம் இந்து முன்னணி சார்பில் "கோயில்களை காப்போம் கோவையை காப்போம்" என்ற தலைப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இந்துக்கோயில்கள் அதிகளவு அகற்றப்பட்டு வருவதாகவும், கோவையில் பல்வேறு இடங்களில் மத கலவரங்களை தூண்டும் வகையில் பல்வேறு அமைப்புகள் செயல்படுவதாகவும், இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருவதாகவும் எனவே கோவையை காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதாக இந்து முன்னணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்களை காப்போம்.. கோவையை காப்போம்..
கோயில்களை காப்போம்.. கோவையை காப்போம்..

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், "கோவை உக்கடம் போன்ற பகுதிகளில் உள்ள நகைக்கடை வியாபாரிகள் இஸ்லாமிய அமைப்புகளைக் கண்டு பயந்து கொண்டிருக்கின்றனர். தற்பொழுது இந்து கோவில்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ளதாகக் கூறி எடுத்து வருகின்றனர்.

கோவில்களை காப்போம்.. கோவையை காப்போம்
கோயில்களை காப்போம்.. கோவையை காப்போம்

திமுக வன்முறைக்கே பிறந்த கட்சி. தேச பக்தி உள்ளவர்களை இழிவுபடுத்துவது தான் இவர்களுக்கு வாடிக்கையான விஷயம். அனைத்து கல்லூரிகளில் பின்னாலும் போதை பொருள் விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் இளைஞர்கள் அனைவரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் சிறந்த காவலர்களை நியமித்து கோவையும் கோயில்களையும் காக்க வேண்டும். இதே நிலைமை தொடர்ந்தால் இந்து முன்னணி தொடர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும்" என தெரிவித்தார்.

கோவை காந்திபுரம் பகுதியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
கோவை காந்திபுரத்தில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

இதையும் படிங்க: 'தமிழ் இனத்தை சாதி, மதத்தால் பிரிப்பதைத் தமிழர்கள் அனுமதிக்கக்கூடாது' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்தார் விழாவில் பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.