ETV Bharat / state

போலீசார் கட்டுப்பாடுக்குள் வந்தது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்... - போலீஸ் பாதுகாப்பு

மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

போலீசார் தீவிர சோதனை
போலீசார் தீவிர சோதனை
author img

By

Published : Nov 21, 2022, 1:14 PM IST

கோவை: கர்நாடக மாநிலம் மங்களூரு, கரோடி பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவில் இருந்து திடீரென மர்ம பொருள் வெடித்து கடும் புகை வெளியேறியது. ஓட்டுநர், பயணி படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், மர்ம பொருள் வெடித்தது விபத்து போல் இல்லை என்றும் தீவிரவாத தாக்குதலுக்கான முகாந்திரம் இருப்பதாக கர்நாடக டி.ஜி.பி. தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கர்நாடகா- தமிழக எல்லைப் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வழக்கத்தை விட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

போலீசார் கட்டுப்பாடுக்குள் வந்தது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

இன்று திங்கட்கிழமை மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறும் நிலையில், முகாமுக்கு வருபவர்களை கண்காணிக்க ஆட்சியர் அலுவலகத்தை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். முகாமுக்கு வரும் வாகனங்கள் சோதனை செய்யும் போலீசார், உரிய ஆவணங்களை சரிபார்த்து அனுமதிக்கின்றனர்.

கோவை குண்டுவெடிப்பு சம்பவம், தற்போது மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் உள்ளிட்ட காரணங்கள் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: இந்திய தேர்தல் ஆணையராக பதவியேற்றார் அருண் கோயல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.