கோடைகாலம் தொடங்கிய நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிவந்தனர். இந்நிலையில், கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
கடுமையான வெப்பம் நிலவிவந்த நிலையில், இன்று மதியம் வால்பாறை சுற்றுவட்டார கருமலை, பச்சைமலை, வெள்ளமலை, வால்பாறை, சோலையார் பண்ணிமேடு போன்ற எஸ்டேட் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இதனால் வால்பாறை பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், அக்கா மலை, காடம்பாறை போன்ற இடங்களில் புற்கள் காய்ந்த நிலையில், வனப்பகுதியில் காட்டுத் தீ பரவாமல் இம்மழையினால் முற்றிலும் தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.