வால்பாறை அடுத்த அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோயில் பகுதியில் பெய்த கனமழையால் நடைபாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் நடராஜ் என்பவருடைய வீட்டுக்குள் கட்டடம் இடிந்ததால் மண் மற்றும் கற்கள் புகுந்தன, இருப்பினும் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. ஆனால் நிலச்சரிவு காரணமாக தற்போது அந்தப் பாதை முழுவதுமாக மூடப்பட்டுள்ளது.
இதனால் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டுக்குள் செல்ல முடியாமலும், வீட்டினுள் இருப்பவர்கள் வெளியே வர முடியாமலும் தவித்து வருகின்றனர்.
இது குறித்து வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் அமுல் கந்தசாமி கூறும்போது, வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது.
தற்சமயம் அண்ணாநகர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, போர்க்கால நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது.
மேலும் இம்மாதிரியான சம்பவங்கள் நடக்காதவாறு தொடர்ந்து கண்காணிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாகுபலி யானையின் உடல்நிலையைக் கண்காணிக்க சிறப்பு குழு