ETV Bharat / state

"நிபா" வைரஸ்: எல்லைப் பகுதியில் சுகாதாரத்துறை முகாம்! - precautionary actions

கோவை: கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால் தமிழ்நாடு, கேரளா எல்லைப் பகுதியில் சுகாதாரத்துறை முகாமிட்டு வாகனங்களில் வருபவர்களை மருத்துவ பரிசோதனை செய்து அனுமதிக்கின்றனர்.

சுகாதாரத்துறை முகாம்
author img

By

Published : Jun 8, 2019, 11:39 AM IST

கேரளா மாநிலத்தில் 2018 ஆம் ஆண்டு நிபா வைரஸ் தாக்கியதில் 16 பேர் உயிரிழந்தனர். இது கேரளா, தமிழ்நாடு மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்திய நிலையில், கேரளா பகுதியில் சில தினங்களுக்கு முன்பு மீண்டும் நிபா வைரஸ் பரவியுள்ளது கண்டறியப்பட்டது.

இதனால், தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் கேரளா - தமிழ்நாடு எல்லைப் பகுதியில் முகாமிடப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருபவர்களை சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்த பின்னே அனுமதிக்கின்றனர்.

சுகாதாரத்துறை முகாம்

காய்ச்சல் அறிகுறி இருப்பவர்களை அருகில் உள்ள சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று ரத்தப் பரிசோதனை செய்யப்படுகின்றது. இதைத் தொடர்ந்து மாநில எல்லையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்குக் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் விவரங்களை ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால் தமிழக கேரளா எல்லைப் பகுதியில் சுகாதாரத்துறை முகாமிட்டு வாகனங்களில் வருபவர்களை விசாரித்து அனுப்புகின்றனர்.

 பொள்ளாச்சி ஜூன் : 07

 கேரளா மாநிலத்தில் கடந்த ஆண்டு நிபா வைரஸ் தாக்கியதில் 17 பேர் இறந்ததால்  கேரளா மற்றும் தமிழகத்தில் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்திய நிலையில் கேரளா பகுதியில் சில தினங்களுக்கு முன்பு மீண்டும் நிபா வைரஸ் பரவியுள்ளதை கண்டறியப்பட்டது.  இதில் கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் நிபா வைரஸ்க்கு சிகிச்சை அளிக்கப்பட்ட செவிலியர் மற்றும் உறவினர்களுக்கு   வைரஸ் இருப்பதாக 5 பேரை கண்டறியப்பட்டது. இதனால் கேரளா தமிழக பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இதையடுத்து தமிழகம் கேரளா மாநிலங்களில் கடந்த ஆண்டு அச்சத்தை ஏற்படுத்தியது அதே போல் தற்போதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது இதனால் தமிழக சுகாதாரத்துறை சார்பில் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்களில் உள்ளவர்களை தமிழக கேரள எல்லைப் பகுதியில்  சுகாதாரத்துறை சார்பில் முகாமிட்டு பரிசோதித்து வருகின்றனர் காய்ச்சல் அறிகுறி இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு அருகில் உள்ள சுகாதாரத்துறை சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு ரத்த பரிசோதனை செய்யப்படுகின்றது மற்றும் ரத்த பரிசோதனையில் காய்ச்சல் இருக்கும் பட்சத்தில் அது எவ்வகை காய்ச்சல் என கண்டறியப் படுகிறது. இதைத் தொடர்ந்து மாநில எல்லையில் உள்ள தனியார் கிளினிக் மருத்துவமனைகளுக்கு காய்ச்சல் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் விவரங்களை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விவரங்கள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் முகாமில் உள்ள மருத்துவர்கள் வாகனங்களில் வருபவர்கள் வருபவர்களிடம் காய்ச்சல் வரும் பட்சத்தில் மருந்து கடைகளில் மருந்துகள் வாங்கி சாப்பிடாமல் மருத்துவமனை சென்று மருத்துவமனையை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை பெறவேண்டும் என வலியுறுத்தியும் வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.