கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜீத் குமார் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டம் முழுவதும் தலைகவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி காவலர்கள், கோவை ரோடு, பாலக்காடு ரோடு, உடுமலை ரோடு, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை பிடித்து அறிவுறுத்தியும் அபராதம் விதித்தும் வருகின்றனர்.
மேலும், வாகனத்தின் நம்பர் பிளேட் எழுத்துக்கள் முறையாக எழுதப்படாமல் இருந்தால், அதனை அப்போதே நீக்கி வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:
தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி - 50 மாணவர்களுக்கு இலவச தலைக்கவசம்