கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூர் அரண்மனையில் மத்திய அரசும், தனியார் கல்லூரியும் இணைந்து நடத்தும் 'பாரதப்பிரதமர் கவுன்சில் போஜன' திட்டத்தின் மூலம் நெசவாளர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. இதில், 500க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். மேலும், பயிற்சிபெறும் அனைத்து நெசவாளர்களுக்கும் அவர்களது வங்கிக் கணக்கில் பயிற்சி முடிந்தவுடன் ரூ. 500 வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டாக்டர் ஜி ராமகிருஷ்ணன் கூறுகையில்,"நெசவாளர்கள் நூறு வருடங்களுக்கும் மேலாக உள்ள ஜக்கார்டு பெட்டிகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், தற்போது அதன் எடையை குறைத்து அவர்கள் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வழங்கும் மானியத் தொகையில் நெசவாளர்களுக்கு ஜக்கார்டு பெட்டி வழங்கப்படுகிறது இதனால் நெசவாளர்கள் கை , கால் வலி இல்லாமல் அதிகளவில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு அதிக வருமானம் பெறலாம். இப்பயிற்சிக் கூடம் மூன்று நாட்கள் நடைபெறும்" என்றார்.
இதையும் படிங்க: பசுமை புரட்சி செய்யும் விவசாயி பாஸ்கர் - ஆயுள் தரும் விவசாயிக்கு மக்கள் பாராட்டு