உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் ரத்தத்தின் பிரிவுகளை கண்டறிந்த காரல் லாண்ஸ்டெய்னர் பிறந்த நாளான இன்றைய தினத்தை (ஜூன்14) ரத்த கொடையாளர் தினமாக 2005ஆம் ஆன்டிலிருந்து கடைபிடித்து வருகின்றோம்.
இதனயைடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரத்த தானம் முகாம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் நாகராஜன், மாநகராட்சி ஆணையராக இன்று பொறுப்பேற்றுள்ள ராஜகோபால் சுன்கரா, மாநகர காவல் ஆணையர் தீபக் எம்.தமோர், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், டி.ஐ.ஜி முத்துசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் ஆகியோர் ரத்த தானம் செய்தனர்.