கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 50க்கும் மேற்பட்ட தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்கள், தங்களை நிரந்தர பணியாளர்களாக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், ‘கடந்த 9 ஆண்டுகளாக கோவை அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்களாக நாங்கள் பணிபுரிந்து வருகிறோம். நாங்கள் பணிபுரிந்து வரும் தனியார் நிறுவனம் எங்களுக்கு எவ்வித குறையும் வைக்கவில்லை. எனினும் அரசின் சலுகைகள் எங்களுக்கு கிடைக்கவில்லை. நாங்கள் எங்களது உரிமையைதான் கேட்கிறோம்.
மருத்துவமனையில் அதிகமான வேலைகளை நாங்கள் செய்து வருகிறோம். எனவே எங்களை நிரந்தர பணியாளர்களாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்’ என மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: பதவியேற்ற சில நாள்களில் கரோனாவால் உயிரிழந்த தலைமை நீதிபதி!