ETV Bharat / state

'கோயில் நகைகளை உருக்குவதற்கு அரசுக்கு உரிமை இல்லை' - கிருஷ்ணசாமி பேட்டி - கோவை மாவட்ட செய்திகள்

தமிழ்நாட்டின் கோயில் நகைகளைத் தொட்டு உருக்குவதற்கு அரசுக்கு உரிமை இல்லை என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சி
கிருஷ்ணசாமி
author img

By

Published : Nov 1, 2021, 10:28 AM IST

கோவை: புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி குனியமுத்தூரில் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”விடுபட்ட மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதில் தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியத்தில் நடந்த மறைமுகத்தேர்தலில் 17 கவுன்சிலர்களில், 13 கவுன்சிலர்களின் வாக்குகளைப் பெற்று செல்லம்மா என்பவர் வெற்றி பெற்றார்.

ஆர்ப்பாட்டம்

மறுநாளே திமுகவின் பத்மநாபன் அச்சுறுத்தலின் பேரில் அவர் ராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமாவை, அந்த மாவட்ட ஆட்சியர் ஏற்றுக்கொள்ளக் கூடாது. தமிழ்நாடு தேர்தல் ஆணையம், ராஜினாமாவின் உண்மைத் தன்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்லம்மாவை ராஜினாமா செய்ய மிரட்டியவர்களைக் கண்டித்தும், அதை விசாரிக்க வலியுறுத்தியும், கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, வரும் நவ.3ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்” எனத் தெரிவித்தார்.

தன்னார்வலர்களை ஊக்குவிக்கிறதா - ?

தொடர்ந்து பேசிய அவர், ”திமுக அரசு ’இல்லம் தேடி கல்வி திட்டம்’ கொண்டு வந்துள்ளது. தமிழ்நாட்டில், 55 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. அவற்றில் இரண்டு லட்சம் ஆசிரியர்கள், 50 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்கள் உள்ளனர். தற்போது, கரோனோ காரணமாக பள்ளிகள் முழுமையாக திறக்கப்படாத நிலையில், எதற்காக 200 கோடி நிதியை இத்திட்டத்துக்கு ஒதுக்கினார்கள்? இந்தத் திட்டம் தன்னார்வலர்களுக்காக வழங்கப்பட்டுள்ளதா அல்லது வெளிநாட்டு நிதிக்காக செயல்படும், தன்னார்வலர்களை ஊக்குவிக்க இத்திட்டம் கொண்டு வரப்பட்டதா?” என்று கேள்வி எழுப்பினார்.

கோயில் நகைகள் மீது அரசுக்கு உரிமை இல்லை

மேலும், “உலக அளவில் உள்ள இந்துகளைத் திரட்டி மனித உரிமைகளைப் பாதுகாக்கும் முயற்சியில் நவம்பர் மாதத்தில் இருந்து ஈடுபட உள்ளேன். இது குறித்த ஆலோசனைக் கூட்டம் விரைவில் சென்னை அல்லது கோவையில் நடைபெறும். தமிழ்நாட்டின் கோயில் நகைகளை உருக்குவதற்கு தமிழ்நாடு அரசுக்கு உரிமை இல்லை. இது பக்தர்கள் தரும் நகை, அதைத் தொடும் உரிமை அரசுக்கு இல்லை” எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நூறுநாள் வேலைத் திட்ட பணியாளர்களுக்கு அமைச்சர் சொன்ன மகிழ்ச்சி தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.