கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வடக்கிபாளையத்தில் இருந்து அரசுப் பேருந்து சுமார் இருபதுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் பொள்ளச்சி நோக்கி சென்றுகொண்டிருந்தது. பேருந்து கொங்குநாட்டன்புதூர் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென பேருந்தின் மேற்கூரை பலத்த காற்றால் பெயர்ந்து பறந்துவிழுந்தது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக பாதிப்பின்றி தப்பினர்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பரவிவருகிறது.