ETV Bharat / state

ஆளுநர்களுக்கும், முதலமைச்சருக்கும் சுமூகமான உறவு இருக்க வேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன் - தமிழிசை

ஆளுநர்களுக்கும், முதலமைச்சருக்கும் சுமூகமான உறவு இருக்க வேண்டும் எனவும், அப்போதுதான் மக்கள் பலன் பெறுவார்கள் என்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

’தமிழ்நாட்டில் காவி வலிமையாக உள்ளது’ - தமிழிசை சௌந்தரராஜன்

author img

By

Published : Apr 29, 2022, 6:58 AM IST

கோவை: பேரூர் பகுதியிலுள்ள தமிழ் கல்லூரியில் சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் கல்லூரி மற்றும் தேசிய சிந்தனை கழகம் இணைந்து முப்பெரும் விழா(சுபகிருது ஆண்டு, அம்பேத்கர் பிறந்த நாள், 75ஆம் ஆண்டு சுதந்திர பெருவிழா) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார் கௌமார மடாலயம் குமரகுருபர அடிகளார் கலந்து கொண்டு உரையாற்றினர்.

ஆன்மீகம் தான் தமிழை வளர்த்தது: நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “ அனைத்து ஊருக்கும் பெயர் இருக்கும். ஆனால் பெயருக்கே ஊராக இருப்பது பேரூர். தங்களிடமிருந்து எங்கெல்லாம் அழைப்பு வருகிறதோ அங்கெல்லாம் தமிழிசை வருவேன். இந்த முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. இங்கு சாந்தலிங்க ராமசாமி அடிகளார் தொண்டாற்றி வருவதாக அறிந்தேன். எனவே ஒரு ராமசாமி(பெரியார்) மட்டும் தமிழுக்கு சேவை செய்ய வில்லை.

’தமிழ்நாட்டில் காவி வலிமையாக உள்ளது’ - தமிழிசை சௌந்தரராஜன்
’தமிழ்நாட்டில் காவி வலிமையாக உள்ளது’ - தமிழிசை சௌந்தரராஜன்

பெண்களின் வளர்ச்சியை வைத்து தான் நாட்டின் வளர்ச்சியைக் குறிப்பிட முடியும் என சொன்னால் இங்கு ஆண்களுக்கு சமமாக பெண்கள் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எழுபத்து ஐந்தாம் ஆண்டு சுதந்திர தின விழாவை ஓராண்டு கொண்டாட உத்தரவிட்ட பிரதமருக்கு நன்றி. தற்போது உள்ள இளைஞர்களுக்கு சுதந்திரம் குறித்து தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக பிரதமர் இவ்வாறு அறிவித்துள்ளார். ஆன்மீகத்தை விடுத்து தமிழ் வளர்ச்சி கிடையாது, ஆன்மிகம் தான் தமிழை வளர்த்தது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது.

தமிழால் கோயில் கதவுகள் திறந்ததும் கோயில் கதவுகள் மூடியதையும் நாம் பார்த்துள்ளோம். தமிழால் அனைத்தும் முடியும் என்பதை உணர்த்தியது இந்த மடங்கள். ஆன்மீகம் இல்லாமல் தமிழ் கிடையாது, தமிழ் இல்லாமல் ஆன்மீகம் கிடையாது. என்னைப் பற்றி பலர் என்ன சொன்னாலும் என்ன எழுதினாலும் நான் துணிச்சலோடு தான் இருக்கிறேன் அதற்குக் காரணம் நான் ஆன்மீக சேவை, தமிழ் சேவை, மக்கள் சேவை செய்து வருகிறேன். கருப்பை(திராவிடம்) மட்டும் பேசுபவர்கள் தற்பொழுது காவியின் கருத்தையும் அரிய முன்வந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் காவி : அரசு இவர்களை(மடாலயர்களை) அழைத்து பேசும் பொழுது அவர்களுக்கு உரிய இருக்கைகள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என பக்தர்களாக நான் கேட்டுக்கொள்கிறேன். காவி ஆன்மீகத்தை குறிக்கிறது. எனவேதான் தமிழகத்தில் காவி வலிமையாகவும் பெரியதாகவும் உள்ளது. நான் தேசியக் கொடியில் இருக்கும் காவி வண்ணத்தையும் அவர்கள் அணிந்திருக்கும் காவி உடையும் குறிப்பிடுகிறேன். என்னால் முடிந்த அளவிற்கு குழந்தைகளுக்கு கல்விக்கு தேவையான உதவிகளைச் செய்கிறேன்.

பணமதிப்பிழப்பு பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. எங்களிடம் இருக்கும் பணம் வெள்ளை, எங்களது உடையும் வெள்ளை. நான் ஒரு சிறந்த அரசியல்வாதி. மடாலயங்கள் மூலம் நடத்தப்படும் கல்வி நிலையங்களுக்கு அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஆளுநர்கள் ஆளுமை மிக்கவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே சமயம் அவர்களும் மக்களில் ஒருவர் தான். காலச் சூழலால் சில நேரங்களில் தனிப்பட்ட முடிவுகளை அவர்கள் எடுப்பதால் அனைத்திலும் தவறு செய்கிறார்கள் என்ற முத்திரையை குத்தி விட வேண்டாம்” என தெரிவித்தார்.

ஆளுநருடன் அமர்ந்து பேச வேண்டும்: அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ அதை நாங்களே ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழ் மக்களாக இங்கு வந்துள்ளேன். இவர்களுக்குப் பக்க பலமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் வந்துள்ளேன். தமிழ்நாடு அரசு ஆன்மீக குருக்களை அழைத்து பேசியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ஆன்மீக குருக்களுக்கும் மடாதிபதிகளுக்கும் அரசு பக்கபலமாக இருக்க வேண்டும். ஆளுநர்களும் மரியாதைக்கு உரியவர்கள் தான், கருத்து வேறுபாடு இருக்கிறது என்பதற்காக ஆளுநர்களை அவமரியாதை செய்வதையும் தரக்குறைவாக பேசுவதையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஆளுநர்களுக்கு என தனிப்பட்ட கருத்து இருக்கமுடியாது. சில நேரங்களில் நீதிமன்றங்களில் வழக்குகளுக்கு சொல்லப்படும் கருத்துக்களை எல்லா ஆளுநர் களுக்கும் பொருத்திப் பார்க்க முடியாது. ஆளுநர்கள் அனைத்து மக்கள் மீதும் அக்கறை கொண்டவர்கள். தமிழ்நாடு பிரச்சனையைப் பற்றி நான் பேசவில்லை. டீ சாப்பிட, மதிய உணவு, இரவு உணவு சாப்பிட கூப்பிட்டால் வர மாட்டேன் என சொல்லாமல் உட்கார்ந்து பேசினால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும்.

அமர்ந்து பேசி பிரச்சினைகளை தீர்க்க பழகுவோம். துணைவேந்தர்களை நியமிப்பதில் அனைவருக்கும் பங்கு இருக்க வேண்டும். அரசியல் சார்பு இருக்கக் கூடாது என்பதற்காக துணைவேந்தர்களை, ஆளுநர்கள் நியமிக்கின்றனர். தமிழ்நாடு அரசுக்கு துணைவேந்தரைத் தேர்வு செய்வோம் என்று சொல்வதற்கு உரிமை உண்டு. அதே சமயம் ஆளுநருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு.

ஆளுநர்களுக்கு முதலமைச்சருக்கும் சுமூகமான உறவு இருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் பலன் பெறுவார்கள். அனைத்திற்கும் எதிர்வினையாற்றும் பொழுது வருங்கால சந்ததிக்கு அது பலன் அளிக்காது. மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு நேரகாலம் எதுவும் கிடையாது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: வணிகவரி, பதிவுத்துறையில் வெளியான புதிய 32 திட்டங்கள் என்னென்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.