ETV Bharat / state

ஆரியர்கள், திராவிடர்கள் என பிரிவினையை ஏற்படுத்தினார்கள்-ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு - ஆளுநர் ஆர் என் ரவி பேச்சு

Governor Ravi speech in Noyyal peruvizhaa event: அந்நியர்கள் படையெடுப்புக்கு பிறகு சாதி, மதம், ஆரியன், திராவிடன் என நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்தினார்கள் ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர் என் ரவி
ஆளுநர் ஆர் என் ரவி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2023, 6:30 PM IST

ஆரியர்கள், திராவிடர்கள் என பிரிவினையை ஏற்படுத்தினார்கள்-ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

கோயம்புத்தூர்: அகில இந்தியா பாரத சங்கம், நொய்யல் டிரஸ்ட் மற்றும் கொங்குமண்டல மக்கள் இணைந்து நடத்தும் நொய்யல் பெருவிழா கோவை பேரூர் திருமடத்தில் நடைபெற்றது. இவ்விழாவின் நோக்கம், பொதுமக்களிடையே நீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர். என்.ரவி கலந்துகொண்டார். இந்நிகழ்வில் பேசிய அவர், தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என உரையை துவங்கினார். சந்நியாசிகள் பங்கேற்றுள்ள நிகழ்வில் பங்கேற்பது ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்வதாகவும். நொய்யல் ஆறு மீட்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது இந்த நிகழ்வு மிகவும் பாராட்டுக்குரியது. நம் நாட்டில் நீர்நிலைகள் உடனான தொடர்பு என்பது உணர்வுகளுடன் தொடர்புடையது. பாரதம் என்றால் என்ன என்ற கேள்விக்கு ஆறு என முதலில் சொல்லப்படும் கலாச்சாரம் கொண்ட நாம் என தெரிவித்த அவர், இயற்கையை பாழாக்கி வருவதன் விளைவு தான், பருவநிலை மாற்றத்திற்கு காரணம், தண்ணீர் இல்லையென்றால் ஒன்றும் இல்லை என்பதனால், நீரை அன்னையாக பார்த்து பிரார்த்திக்க வேண்டும்.

அந்நியர்கள் படையெடுப்புக்கு பிறகும், நம்மை விட்டு சென்றவுடன், நாட்டில் தொழிற்சாலைகள், பொருளாதாரம் வளர்ந்தாலும் பாரதத்துடனான உயிர்த் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அந்நியர்கள் படையெடுப்புக்கு பிறகு சாதி, மதம், ஆரியன், திராவிடன் என பிரிவினையை நம்மிடையே ஏற்படுத்தினார்கள், நம் நாட்டை வலுப்படுத்துவதை நம் ஒவ்வொருவரின் கடமை.

ராஜா, ராணியாக செயல்படுவது நம் பாரதமில்லை, சமூகம் அடிப்படையில் ஒரு குடும்பமாக வாழ்பவர்கள் நாம் என்பதனால், அந்த சமூகத்தை மீட்க வேண்டிய நிலையில் உள்ளோம். இந்த பாரதம் ரிஷி, குருமார்களால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், அதிகாரம் செய்யும் நோக்கம் இல்லாமல் அறிவை வழங்கும் என்பதால் ரிஷிகளின் வெளிச்சமே தற்போது உலகத்திற்கு தேவையானது.

அனைவரும் ஒரு குடும்பம் இந்தியாவின் சமூகத்தை எழுப்புவதுடன், நாம் யார் என்பதை உணர வைக்க வேண்டும், அதற்கு நீர்நிலைகள் பாதுகாப்பு அவசியம் என்பதால் இந்நிகழ்வு வெற்றியடைய வாழ்த்துகள், வளமாக மட்டுமின்றி அன்னையாக ஆறுகளை பார்க்கும் மன நிலையை உருவாக்க வேண்டும் என்று உரையை நிறைவு செய்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

இந்நிகழ்வில் அகில பாரதீய சந்நியாசிகள் சங்கத்தின் நிறுவனர் ராமானந்த மகராஜ், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:எட்டப்பர்களுக்கு அதிமுகவில் இடம் இல்லை - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.