கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் கடந்த அக்டோபர் மாதம் அடையாளம் தெரியாத நபர்கள் 5 மாத பெண் குழந்தையை கடத்திச் சென்றனர்.
கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின்பேரில் 6 தனிப்படை அமைக்கப்பட்டது.
சந்தேகத்தின்பேரில் சேத்துமடை அண்ணாநகரைச் சேர்ந்த முருகேசன் என்பவரை தனிப்படையினர் பிடித்து விசாரணை செய்தனர்.
அதில் ராமர் அங்கலக்குறிச்சியை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவருக்கு குழந்தையை 90,000 ரூபாய்க்கு முருகேசன் விற்றது தெரியவந்தது. முருகேசனுக்கு முத்துப்பாண்டி என்பவர் உதவியுள்ளார்.
தனிப்படையினர் ராமர், முருகேசன், முத்துப்பாண்டி ஆகியோரைக் கைது செய்து பொள்ளாச்சி நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் குண்டர் தடுப்புச் சட்டத்தில் ராமரை கைது செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு பரிந்துரைத்தார்.
அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் சமீரன் குண்டர் தடுப்புச்சட்டத்தில் ராமரை கைது செய்ய ஆணைப் பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: போக்குவரத்து விதிகளை மீறும் வகையில் விளம்பரம்: நடிகர் கார்த்தி மீது புகார்