கோயம்புத்தூர்: சர்வதேச விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக நுண்ணறிவு பிரிவு அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த பயணி ஒருவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டபோது தங்கத்தை பேஸ்ட் வடிவில் உருக்கி மூன்று பாலித்தீன் பாக்கெட்டுகளில் மலக்குடலில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து மருத்துவர்கள் உதவியுடன் அவரது வயிற்றில் இருந்து 3 ஓவல் வடிவ கருப்பு நிற பாலித்தீன் பாக்கெட்டுகளை எடுத்தனர். சுமார் 31 லட்சம் ரூபாய் மதிப்பிலான 640.110 கிராம் தங்கத்தை கைப்பற்றிய அலுவலர்கள், அவற்றை சுங்கச் சட்டம் 1962ன் கீழ் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்த அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: Chennai Airport Smuggling: காபி இயந்திரத்தில் தங்கக்கட்டி கடத்தல் - மூவர் கைது