ETV Bharat / state

கோயம்புத்தூரில் தங்க நாணய ஏடிஎம் இயந்திரம் அறிமுகம்!

author img

By

Published : Apr 30, 2021, 12:26 PM IST

கோயம்புத்தூர்: ஃபுள் மூன் எக்ஸ்போர்ட்ஸ் தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில், பூ மார்க்கெட் பகுதி சிங்கப்பூர் பிளாசாவில் தங்க நாணயங்கள் வழங்கும் ஏடிஎம் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் தங்க நாணய ஏடிஎம் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஃபுள் மூன் எக்ஸ்போர்ட்ஸ் தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் பூ மார்க்கெட் பகுதி சிங்கப்பூர் பிளாசாவில் தங்க நாணயங்கள் வழங்கும் ஏடிஎம் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பணமாகவோ, பணப்பரிவர்த்தனை செயலிகளில் உள்ள யுபிஐ பயன்படுத்தியோ தங்க காயின்களை பெற்றுக் கொள்ளலாம்.

இவை 916 தரச் சான்றிதழ் பெற்ற க்யூஆர் கோர்டு பொறிக்கப்பட்ட தங்க நாணயங்களாக வெளிவருகிறது. பின்னர் இதனை விற்கும் சமயத்தில் க்யூஆர் கோர்டை ஸ்கேன் செய்து நாணயம் வாங்கப்பட்ட நாளை அறிந்து கொள்ளலாம். மேலும் நாளுக்கு நாள் மாறுபடும் தங்கத்தின் விலைக்கேற்ப அவை விற்பனை செய்யப்படும்.

இதுகுறித்து ஃபுள் மூன் நிறுவன சங்க உறுப்பினர் சீனிவாசன் பேசுகையில், “இந்த 24 மணி நேர ஏடிஎம் இயந்திரம் மூலம் ஒன்று, இரண்டு, நான்கு, எட்டு கிராம் ஆகிய அளவுகளில் தங்க நாணயங்களை பெற்றுக் கொள்ள முடியும். இதற்கான பணத்தை இயந்திரத்திலேயே பணம் அல்லது யுபிஐ மூலம் செலுத்தலாம்.

இந்த நாணயங்களுக்கு 916 சான்றிதழ் தந்துள்ளோம். ரெசிப்ட்டும் வந்துவிடும். கரோனா காலம் என்பதால் நகைக்கடைகளுக்கு செல்வதை குறைக்கவே இந்த இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

பணம் மூலம் நாணயம் வாங்கினால் அரசு கூறியுள்ள இரண்டு லட்சம் வரை மட்டுமே செலுத்தி நாணயம் பெறலாம். யூபிஐ என்றால் எவ்வளவு வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்தியாவில் இது போன்ற ஏடிஎம் இதுவே முதன்முறை. இதனை பல்வேறு இடங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

இதையும் படிங்க : இன்று திருமணம் செய்யவிருந்தவர் கரோனாவால் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.