வால்பாறை, காமராஜ் நகரைச் சேர்ந்தவர் சாமுவேல் மகன் தாஸ் என்ற மரியசூசை (42). இவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வால்பாறை காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான காவல் துறையினர், அவருடைய வீட்டுக்கு சென்று மரியசூசையை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து கால் கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர், மரியசூசையை வால்பாறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். ஏற்கனவே, மரியசூசை மீது கஞ்சா விற்பனை தொடர்பான 10 வழக்குகள் உட்பட 19 வழக்குகள் உள்ளன. இதன் காரணமாக, இரண்டு முறை குண்டர் சட்டத்தின் கீழ் மரியசூசை சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.