ETV Bharat / state

அதிகாலையில் காணாமல்போன குழந்தை சடலமாக மீட்பு - Coimbatore

கோவை: விளாங்குறிச்சி பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து இரண்டரை வயது பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை சடலமாக மீட்பு
author img

By

Published : Jun 24, 2019, 12:31 PM IST

Updated : Jun 24, 2019, 2:17 PM IST

கோவை மாவட்டம், அன்னூர் செங்கப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் கனகராஜ் - காஞ்சனா தம்பதி. இவர்களுக்கு இரண்டரை வயதில் அரும்பதா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் தம்பதி விளாங்குறிச்சியில் வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கியுள்ளனர். இன்று அதிகாலை 1 மணியளவில் அரும்பதா பசியால் அழுததால், காஞ்சனா குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்துவிட்டு அவரும் தூங்கியுள்ளார்.

இதையடுத்து இன்று அதிகாலை நான்கு மணிக்கு மீண்டும் பால் கொடுக்க காஞ்சனா எழுந்திருந்தபோது, படுக்கையில் குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து வீடு, தெருக்களில் தேடிப் பார்த்துள்ளார். அப்போது வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள பாழடைந்த கிணற்றில் குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Intro:கோவை விளாங்குறிச்சியில் இரண்டரை வயது பெண்குழந்தை கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Body:
கோவை அன்னூர் செங்கப்பள்ளி சேர்ந்தவர் கனகராஜ்.இவரது மனைவி காஞ்சனா இவர்கள் கோவை விளாங்குறிச்சியில் உள்ள குப்புராஜ் தோட்டத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். ஜேசிபி வாகனம் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டரை வயதில் அரும்பதா என்ற பெண் குழந்தை இருந்தது. நேற்று இவர்களது வீட்டிற்கு உறவினர்கள் வந்திருந்தனர். நேற்று இரவு உணவு சாப்பிட்ட பின்பு குழந்தையுடன் காஞ்சனா மற்றும் கனகராஜிம் வீட்டின் உள்ளே உறங்கச்சென்றார்.வீட்டின் வெளியே வந்திருந்த உறவினர்களில் சிலரும் வீட்டின் வெளியே கட்டிலில் படுத்து தூங்கியுள்ளனர். அதிகாலை இரண்டரை மணியளவில் பாத்ரூம் செல்வதற்காக எழுந்த காஞ்சனா குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு உறங்க வைத்துள்ளார். இன்று காலை நாலரை மணிக்கு காஞ்சனா எழுந்து பார்த்தபோது குழந்தை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் முன்பு எதாவது விளையாடிக்கொண்டு இருக்கும் என தேடிப்பார்த்தனர்.அருகில் எங்காவது இருக்குமா எனவும் உறவினர்கள் மற்று கனகராஜிம் தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.வீட்டிலிருந்து 500மீட்டர் தொலைவில் கருவேலங்காட்டுப்பகுதியில் தேடிப்பார்த்தபோது அங்கு உள்ள பாழடைந்த கிணற்றில் குழந்தை அரும்பதா கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே கிணற்றில் கயிற்றை கட்டி இறங்கி குழந்தையை தூக்கினர். குழந்தை மயங்கி இருப்பதாக நினைத்து தூக்கிக்கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள்  தெரிவித்தனர். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பீளமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்...Conclusion:
Last Updated : Jun 24, 2019, 2:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.