தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொள்ளாச்சியில் இன்று (ஏப். 25) காலைமுதல் முழு ஊரடங்கை பொதுமக்கள் கடைப்பிடித்துவருகின்றனர்.
பேருந்து நிலையங்கள், முக்கியக் கடைவீதிகள், பொள்ளாச்சி பாலக்காடு சாலை, கோயம்புத்தூர், பழனி சாலை ஆகிய பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
குறிப்பாக அத்தியாவசிய பொருள்களான பால், மருந்து வகைகள் ஆகியவற்றை எடுத்துச் செல்கின்ற வாகனங்கள், வழக்கம்போல் செயல்பட்டுவருகின்றனர். அனைத்துப் பகுதிகளிலும் காவல் துறையினர் தீவிர வாகன சோதனைகளிலும், பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும் ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் எனவும், அப்படி மீறி வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல்செய்யப்ட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் காவல் துறையினர் எச்சரித்து அனுப்பிவருகின்றனர்.
இதையும் படிங்க: ஒருநாள் பாதிப்பில் மூன்றரை லட்சத்தை நெருங்கிய கரோனா!