கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
அவினாசி மேம்பாலத்திற்கு அடியில் சாக்கடை நீருடன் மழைநீர் கலந்ததால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது.
மேட்டுப்பாளையம் எம்ஜிஆர் மார்க்கெட்டில் வைக்கப்பட்ட வெங்காய மூட்டைகள் மழைநீரில் நனைந்து நாசமாகின.
புரூக் பீல்டு சாலையில் உள்ள பூ மார்க்கெட் மைதானம் சேறும் சகதியுமானது.
ஆவாரம்பாளையத்தில் பல குடியிருப்புகள் சேதமடைந்தன.
இப்பகுதியை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திக் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதையும் படிங்க: தொடர் மழை: நீரில் சிக்கி 3,500 கோழிக் குஞ்சுகள் உயிரிழப்பு