ETV Bharat / state

Magna Elephant: கோவையில் வனத்துறை ஜீப்பை தாக்கிய மக்னா யானை.. 6 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்! - Forest guard attacked by magna elephant

கோவை சரளபதி பகுதியில் தனியார் தோட்டத்தில் முகாமிட்டுள்ள மக்னா யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினரின் ஜீப் மீது யானை தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Elephant Attack
Elephant Attack
author img

By

Published : Apr 29, 2023, 12:30 PM IST

கோவையில் வனத்துறை ஜீப்பை தாக்கிய மக்னா யானை

பொள்ளாச்சி : கிருஷ்ணகிரி, தருமபுரி பகுதியில் சுற்றித் திரிந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தியும், பொது மக்களை அச்சுறுத்தியும் வந்த மக்னா யானையை கடந்த சில நாட்கள் முன் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். ஆனைமலை புலிகள் காப்பக டாப் சிலிப் பகுதியில் உள்ள யானை குந்தி வனப்பகுதியில் யானையை வனத்துறையினர் கொண்டு போய் விட்டனர்.

இந்த நிலையில் வனப்பகுதியை விட்டு யானை மீண்டும் வெளியேறி மதுக்கரைக்கு சென்றது. அதன்பின், மீண்டும் மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்த வனத்துறையினர் ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியான மானாம்பள்ளி வனச்சரம் மந்திரி மட்டம் பகுதியில் விட்டனர்.

வனத்தை விட்டு மீண்டும் வெளியேறிய மக்னா யானை டாப்சிலிப் வழியாக பொள்ளாச்சி வனப்பகுதிக்குள் வலம் வருகிறது. தம்மம்பதி பகுதிகளில் உலா வரும் மக்னா யானை தனியார் தோட்டம் ஒன்றில் உலா வந்து அங்குள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் 4 குழுக்களாக வனத்துறையினர் பிரிந்து யானையை கண்காணிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கும்கி யானைகளான முத்து, சின்னத்தம்பி மற்றும் ராஜவர்தன் ஆகிய யானைகள் சரளபதி பகுதியில் மக்னாவை கட்டுப்படுத்த ஒரு வாரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அதிகாலை 3 மணி அளவில் சரளபதி அருகே உள்ள தனியார் மாந்தோப்பில் மக்னா யானை புகுந்தது.

யானையை தேடி வந்த வனத்துறையினர் மாந்தோப்பு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மறைந்து இருந்த மக்னா யானை திடீரென ஆக்ரோஷமாகி வனத்துறையினர் வந்த வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் வனத் துறையினர் ஜீப் தலை குப்புற கவிழ்ந்தது.

இதில் வாகன ஓட்டுநர் மணிகண்டன், வனவர் மெய்யப்பன், வனக்காப்பாளர் ராஜ், வேட்டை தடுப்பு காவலர்களான அகிலேஷ் மற்றும் மணி உள்ளிட்ட ஆறு பேர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மக்னா யானையின் திடீர் தாக்குதலில் வனத்துறையினர் வந்த ஜீப்பின் ஒரு பகுதி பலத்த சேதமானது.

காயம் அடைந்த வீரர்கள் வேட்டைக்காரன் புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மேலும் வனத்துறையினர் மக்னா யணையை காட்டுக்குள் விரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : பூங்கா பராமரிப்பு டெண்டரில் பாகுபாடு சர்ச்சை.. சென்னை மாநகராட்சியின் அதிரடி முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.