கோயம்புத்தூர் மாவட்டம் மருதமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள கல்வீராம்பாளையம் பகுதியில் இன்று (நவ. 13) காலை தெருநாய்கள் துரத்தியதில் நான்கு வயது புள்ளிமான் ஒன்று கொம்பு உடைந்து தலையில், காயங்களுடன் குடியிருப்புப் பகுதிக்குள் வழித்தவறி வந்தது.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் மானுக்கு முதலுதவி செய்து, அடர் வனப்பகுதிக்குள் விட்டனர்.
மான் கொம்புகள் உடைந்திருப்பது குறித்து வனத் துறையினர் கூறும்போது, மான் இயல்பாகவே இரண்டாம் முறை கொம்பு வளர்வதற்காக, தாமாகவே கொம்புகளை உடைத்துக் கொள்ளும் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கடலில் தத்தளித்த புள்ளி மான்... துரிதமாக செயல்பட்ட மீனவர்கள்!