கோவை: வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் சாலையில் மளுக்க பாறை பகுதியில் குட்டியுடன் காட்டு யானை சாலையில் நின்று கொண்டிருந்தது. அந்த வழியாக சாலக்குடிக்கு வாகனங்களில் சென்றவர்கள் யானை சாலையில் நிற்பதை பார்த்ததும் வாகனங்களை நிறுத்தினர்.
யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் குட்டியுடன் சாலையிலேயே வெகு நேரமாக நின்று கொண்டிருந்தன. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பின்னர் தாய் யானை தனது குட்டியுடன் வனப்பகுதிக்குள் சென்றன. காட்டு யானைகள் வனப்பதிக்குள் சென்றதைப் பார்த்த வாகனங்களில் இருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர்.
இது பற்றி வனத்துறையினர் கூறும்போது, தற்பபோது வால்பாறை சாலக்குடி சாலையில் குட்டியுடன் யானைகள் நடமாடி வருகிறது. அந்த வழியே வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும்.
இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் வாகனங்களை வனப்பகுதிக்குள் நிறுத்திவிட்டு வனவிலங்குகளை போட்டோ எடுப்பதும், சாலையோரம் நின்று சாப்பிடுவதும் கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ரூ.9 ஆயிரம் மோசடி வழக்கில் 28 ஆண்டுக்கு பிறகு பரபரப்பு தீர்ப்பு!