கடந்த 6 ஆம் தேதி, தாய்லாந்து நாட்டிலிருந்து, தமிழ்நாட்டிற்கு 7 பேர் சுற்றுலா வந்தனர். சென்னை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு அக்குழுவினர் சென்றனர். அதில், 49 வயதான டான் ரோசக் என்பவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
மேலும் இவர், காய்ச்சல், நீரிழிவு நோய் உள்ளிட்டவை காரணமாக, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து டான் ரோசக்கினை பரிசோதனை செய்ததில், அவருக்கு கோவிட்-19 பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.
இந்நிலையில், நேற்று காலை சிறுநீரக செயலிழப்பு காரணமாக டான் ரோசக் உயிரிழந்தார். இதனை கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகன் உறுதி செய்தார்.
இதையும் படிங்க: கொரோனா எதிரோலி: குமரி சுற்றுலாப் பயணிகளுக்கு கிருமி நாசினி தெளிப்பு!