ETV Bharat / state

வக்கீலுக்கு வந்த சோதனை..வாங்காத தனிநபர் கடனை கட்டச் சொல்லிய தனியார் நிதி நிறுவனம் - ரூ.1 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்! - etv bharat news in tamil

Personal loan: கோயம்புத்தூரில் வாங்காத தனிநபர் கடனை கட்டச் சொல்லி வற்புறுத்துவதாகத் தனியார் நிதி நிறுவனம் மீது வழக்கறிஞர் அப்துல் கரீம் என்பவர் குற்றம் சாட்டி உள்ளார்.

personal loan
வக்கீல்க்கு வந்த சோதனை..வாங்காத தனிநபர் கடனை கட்டச் சொல்லி தனியார் நிதி நிறுவனம் வற்புறுத்தல்!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2023, 5:32 PM IST

Updated : Dec 22, 2023, 7:30 PM IST

கோயம்புத்தூர்: புலியகுளம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் அப்துல் கரீம். தனியார் நிதி நிறுவனத்திடம் வாங்காத தனிநபர் கடனை கட்டச் சொல்லி வற்புறுத்துவதாகக் குற்றம் சாட்டி உள்ளார்.

இதுகுறித்து வழக்கறிஞர் அப்துல் கரீம் கூறுகையில், “கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பஜாஜ் பின்சேர்வ் நிதி நிறுவனத்தில் கடன்பெற்று, மடிக்கணினி, தொலைக்காட்சி உள்ளிட்டவற்றை வாங்கி உள்ளேன். பின்னர், அந்தக் கடன் தவணைகளை முறையாகச் செலுத்தி முடித்து, தடையில்லாச் சான்றிதழையும் பெற்றுள்ளேன்.

இந்நிலையில், கரோனா பெருந்தொற்று காலத்தில் கோவையில் உள்ள வழக்கறிஞர்களுக்கு நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஒரு அரசு வங்கிக் கடன் வழங்கியது. அப்போது, தனிநபர் கடனுக்காக விண்ணப்பித்த போது, அந்த விண்ணப்பத்தை வங்கி நிராகரித்து, கடன் வழங்க மறுத்தது.

உடனடியாக வங்கி நிர்வாகத்தினரிடம் விசாரித்த போது, தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சம் தனி நபர் கடன் வாங்கியுள்ளதாகவும், அந்த கடனை முறையாகச் செலுத்தாத காரணத்தினால் கடன் வழங்க முடியாது எனவும், சிபில் ஸ்கோர் குறைந்து இருப்பதால், இனி எந்த நிறுவனத்திலும் கடன் வாங்க முடியாது எனவும் தெரிவித்தனர்.

ஆனால், நான் கடன் வாங்கவோ, அல்லது கடனுக்கு விண்ணப்பம் செய்யாத நிலையில், எப்படி தன் பெயரில் கடன் வந்தது என பஜாஜ் பின்சேர்வ் நிதி நிறுவனத்திடம் சென்று விசாரித்த போது, முறையான பதில் அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, ரூ.1 லட்சம் கடனை செலுத்தக்கோரி பஜாஜ் பின்சேர்வ் நிதி நிறுவனத்தினரிடம் இருந்து தொடர்ந்து குறுஞ்செய்திகள் மற்றும் தொலைப்பேசி அழைப்புகள் மூலம் தொல்லை அளித்தனர்.

அப்போது, தான் வாங்காத கடனை கட்ட முடியாது எனக் கூறிய நிலையிலும், எனது வீட்டிற்கு வந்து கடனை செலுத்துமாறு தொடர்ந்து தொல்லை அளித்தனர். இதனால், நான் மன உளைச்சலுக்கு ஆளாகி பஜாஜ் பின்சேர்வ் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தனக்கு இழப்பீடு வழங்க வேண்டுமெனவும், கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.

இந்த வழக்கில் பஜாஜ் பின்சேர்வ் நிதி நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் நீதிமன்றம் விதித்து அதனை தனக்கு வழங்கவும் மேலும், வழக்கிற்கு ஆன செலவாக ரூ.5 ஆயிரத்தை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பஜாஜ் பின்சேர்வ் நிதி நிறுவனம் அபராதத் தொகையை உடனடியாக தனக்கு வழங்க வேண்டுமெனவும், இல்லையெனில் நீதிமன்றத்தில் மேல் நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஓசூர் இரட்டை கொலை வழக்கில் 5 பேர் பாலக்கோடு நீதிமன்றத்தில் சரண்!

Last Updated : Dec 22, 2023, 7:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.