ETV Bharat / state

'பசித்தவர்கள் எடுத்துக்கொள்ளுங்கள்' - திட்டம் தொடக்கம் - பசித்தவர்கள் எடுத்து கொள்ளுங்கள்

கோவை: 'அன்னை கரங்கள்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவன தன்னார்வலர்கள், காவல் துறையினர் இணைந்து 'பசித்தவர்கள் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்ற திட்டத்தினை தொடங்கியுள்ளனர்.

Free food
Free food
author img

By

Published : May 24, 2021, 8:39 PM IST

கரோனா ஊரடங்கு காலத்தில் ஆதரவற்றவர்கள் உள்பட சிலர் உணவு இன்றி பசியால் தவிப்பதைப் போக்கும் வகையில் கோவை மாவட்ட காவல் துறையினர் மற்றும் 'அன்னை கரங்கள்' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் இணைந்து 'பசித்தவர்கள் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்ற திட்டத்தை தொடங்கினர்.

அதன்படி, கோவை - நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் 'பசித்தவர்கள் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்ற திட்டத்தில் உணவு வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தொடங்கி வைத்தார்.

இங்கு தினமும் உணவு, தண்ணீர், பிஸ்கெட், வாழைப்பழம், ரொட்டி ஆகியவை வைக்கப்படும். உணவு இன்றி தவிப்பவர்கள் அதை எடுத்துக் கொள்ளலாம். உணவுகளை வைக்க விருப்பம் உள்ளவர்கள் உணவுகளை வைத்தும் செல்லலாம்.

இத்திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் தன்னார்வலர்களைக் கொண்டு விரிவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: முன்பதிவு மையங்கள் குறைப்பு - தெற்கு ரயில்வே!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.